வளர்பிறையில் பிறத்தவரா? உங்களது பட்சி எது தெரியுமா? – Valarpirai Panja Patchi Sasthiram
Valarpirai Panja Patchi Sasthiram – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நீங்கள் வளர்பிறையில் பிறந்தவரா அப்படி என்றால் உங்களுக்கு பட்சி எதுவென்று தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். பட்சி என்றால் பறவை என்று பொருள். பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.
27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்கும் அடங்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.
பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும். பஞ்ச பட்ச சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை வைத்து உருவாக்கப்பட்டது. அவை வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவை ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எப்பேர்ப்பட்ட கடனையும் அடைக்க மார்ச் மாதத்தில் உள்ள இந்த 2 நாட்கள் மட்டும் போதும்..!
வளர்பிறை பஞ்ச பட்சி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?
பஞ்ச பட்சி பார்க்கும் முறை:
நீங்கள் வளர்பிறையில் அதாவது அமாவாசை தொடங்கி, பௌர்ணமியில் பிறந்தவர் என்றால் உங்களது பட்சி எதுவென்று பார்க்கும் முறை இதோ.
வல்லூறு பட்சி:
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வல்லூறு பட்சிக்கு சொந்தக்காரர்கள் ஆவார்.
நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அ, ஆ, ஒள முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கு வல்லூறுதான் பட்சியாகும்.
ஆந்தை பட்சி:
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு ஆந்தை பட்சிக்கு சொந்தக்காரர்கள் ஆவார்.
நட்சத்திரம் தெரியவில்லை என்றால் இ, ஈ முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கு ஆந்தை தான் பட்சியாகும்.
காகம் பட்சி:
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காகப்பட்சியினை கொண்டவர்கள் ஆவர்.
நட்சத்திரம் தெரியவில்லை என்றால் உ, ஊ முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கு காகம் தான் பட்சியாகும்.
கோழிப்பட்சி:
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சிக்காரர்கள் ஆவார்கள்.
நட்சத்திரம் தெரியவில்லை எனில் பெயரின் முதல் எழுத்தாய் எ, ஏ கொண்டவர்கள் கோழிப்பட்சிக்குரியவர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!
மயில் பட்சி:
திருவோணம், அவிட்டம், சதயம், புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, நட்சத்திரத்தில் பிறத்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள்.
நட்சத்திரம் தெரியவில்லை என்றால் உங்கள் பெயரின் முதல் எழுத்து ஒ, ஒ எனில் மயில் பட்சிக்குரியவர்களே.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |