வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் | Vastu Shastra For House in Tamil
வாஸ்து பார்ப்பதற்கான முக்கிய காரணமே மக்கள் அவர்களின் நல் வாழ்விற்காக செய்யும் எந்த விதமான காரியங்களும் அசுப பலன்களையும் தரக்கூடாது என்பதற்காக தான். அதிலும் கண்டிப்பாக எல்லோரும் வீடு கட்டுவதற்கு வாஸ்து சாஸ்திரம் பார்ப்பார்கள். கட்டிடம் கட்டுவதற்கான மனை, கட்டிடத்தின் அமைவிடம், திசை போன்றவற்றை கணிப்பதில் முக்கிய பங்கு வாஸ்துவிற்கு உள்ளது, அந்த வகையில் இன்றைய ஆன்மிகம் பகுதியில் வீடு கட்டும் போது எந்த மாதிரியான வாஸ்து சாஸ்திரங்களை பார்க்க வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீடு கட்டும் வாஸ்து முறை:
- வாஸ்து சாஸ்திரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு என எட்டு திசைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.
- வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவில் அமைவது மிகவும் நல்லது.
- வீட்டின் வாசல் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் அமைவது சிறந்தது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைய வேண்டும்.
- வீடு கட்டும் போது தெற்கு, மேற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் கட்டிடங்கள் உயர்ந்தும், வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதியில் சற்று தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
- தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அலமாரிகள் அமைவது நல்லது.
கிழக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்:
- கிழக்கு நோக்கி வீட்டின் வாசல் இருந்தால் கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். ஏனெனில் கிழக்கு திசையில் தான் இந்திரன் தங்கியிருக்கிறார்.
- வீட்டின் வாசலில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் படுவது நல்லது.
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்:
- மேற்கு திசையில் வீட்டின் வாசல் இருந்தால் வீட்டில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும். இந்த திசையை வருண பகவான் பார்வையிடுவதால் இல்லத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- மேஷ ராசியினருக்கு இந்த திசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்:
- வடக்கு திசையை நோக்கி வீட்டின் வாசல் அமைந்தால் இல்லத்தில் செல்வ வளத்திற்கு எந்த குறையும் இருக்காது.
- ஏனெனில் இந்த திசையில் தான் குபேர பகவான் வாசம் செய்கின்றார். மேலும் பூஜை அறை வடக்கு திசை நோக்கி இருந்தால் மிகவும் நல்லது.
தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்:
- தெற்கு திசையில் எமன் வாசம் செய்வதால் பெரும்பாலானோர் தெற்கு திசையில் வீட்டின் வாசலை அமைப்பதில்லை. ஆனால் இந்த திசை தொழிலதிபர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
புதிய வீடு கட்ட வாஸ்து:
- வட கிழக்கு திசை நோக்கி நுழைவுவாயில், பூஜை அறை, ஹால் மற்றும் குளியல் அறையை அமைப்பது சிறந்தது. மேலும் இது ஈசான்ய மூலை என்பதால் இல்லத்தில் சகல செல்வங்களும் குடி கொள்ளும்.
- தென்கிழக்கு திசை அக்னி திசைக்கு உரியது. எனவே, இந்த திசையில் சமையல் அறையை அமைப்பது நல்லது, மேலும் இந்த திசையில் பெண்களின் சக்தி சமநிலை செய்யப்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
- வடமேற்கு மூலையை நோக்கி படுக்கை அறையை அமைப்பது நல்லது. இந்த திசையை நோக்கி அமைக்கப்படும் வீட்டில் நிம்மதி, செல்வம், புகழ் போன்ற சிறப்பம்சங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
- தென்மேற்கு மூலையை நைருதி மூலை அல்லது கன்னி மூலை என்று அழைப்பார்கள். இந்த மூலையில் நீர் உபயோகத்தொட்டி அமைப்பது நல்லது.
- மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய வேண்டும்.
- வீடு கட்ட திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற கிழமைகள் உகந்தது.
வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |