வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்
நாம் என்ன தான் உழைத்து சம்பாதித்தாலும் கூட வீட்டில் பணம் தங்கவே மாட்டேங்குது என்பது தான் பலருடைய புலம்பலாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் பணம் எப்படியாவது செலவு ஆகிவிடுகிறது என்பதும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இனி இதுமாதிரி பிரச்சனைகள் இல்லாமல் உங்களுடைய வீட்டில் பணம் தங்க இன்றைய பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். ஆகவே இன்று வீட்டில் தங்கவும் மற்றும் பணம் பெருகவும் என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய ஆன்மீக பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரிசியை எந்த கிழமையில் வாங்கினால் செல்வம் பெருகும்..!
Veetil Panam Thanga:
வீட்டில் பண வரவு அதிகரிக்கவும் மற்றும் பண தங்கவும் நீங்கள் நிறைய வகையான ஆன்மீக செயல்களை செய்து இருப்பீர்கள். ஆனால் அவை அனைத்தும் உங்களுக்கு உதவவில்லை என்று கவலை பட வேண்டாம்.
இனிவரும் காலங்களில் ஆவது உங்களுடைய வீட்டில் பணம் தங்க முதலில் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு மண்ணினால் செய்த பானையை வாங்கி கொள்ளுங்கள்.
இப்போது பூஜை அறையில் சாமிப்படங்களுக்கு முன்பு ஒரு தாம்பூலம் தட்டு வைத்து அதன் மீது அந்த மண் பானையை வைத்து விடுங்கள்.
அடுத்து அந்த பானையில் கல் உப்பை போட்டு கொள்ளுங்கள். பின்பு அந்த கல் உப்பின் மீது துவரம் பருப்பு போட்டு கொண்டு இதன் மீது வெள்ளியால் ஆன பொருட்கள் ஒன்றை வைக்க வேண்டும்.
கடைசியாக அந்த பானையின் மீது 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களை போட்டு சமம் செய்து கொள்ளவும். அதற்கு பிறகு நீங்கள் சம்பாதித்த பணத்தை அந்த பானையின் மேலே வைத்து விட வேண்டும்.
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் பானை தயார் செய்து அதனை பூஜை அறையில் வடக்கு திசையில் வியாழக்கிழமை அன்று வைக்க வேண்டும். வியாழக்கிழமை லட்சுமி குபேரருக்கு உகந்த நாளாக இருக்கிறது.
அதனால் வியாழக்கிழமை அன்று இதனை செய்து அதன் பிறகு அந்த பானையில் இருக்கும் பணத்தினை நீங்கள் செலவு செய்தாலும் கூட இனிமேல் நீங்கள் சம்பாதித்த பணம் விரைவில் வீட்டில் தங்க ஆரம்பிக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் அந்த பானையை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் வியாழக்கிழமை, அம்மாவாசை மற்றும் பெளர்ணமி ஆகிய நாட்களில் மாற்றிக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களே இந்த மாதிரியான வளையலை மட்டும் கையில் போடுங்கள் பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |