இந்த மரங்களை வீட்டில் வளர்த்தால் நன்மை பெருகும் | Veetil Valarka Vendiya Marangal

Veetil Valarka Vendiya Marangal

வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் | Vastu Padi Veetil Valarka Vendiya Maram

பொதுநலம்.காம் வாசகர் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் இன்று ஆன்மிகம் பதிவில் வீட்டில் வளர்க்க வேண்டிய செடி, மரங்கள் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக வீட்டில் என்ன விஷயம் செய்தாலும் அதனை வாஸ்து படி தான் செய்வார்கள். அந்த வகையில் வீட்டில் என்ன மரச்செடிகள்  வளர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். எந்த நல்ல விஷயத்தை தெரிந்துகொண்டு அதை நாம் மட்டும் வைத்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை அதனை மற்றவர்களுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். அதே போல் தினமும் எதோ ஒரு நல்ல விஷங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்:

வேப்பமரம் பயன்கள்:

வேப்பமரம் பயன்கள்

  • பொதுவாக வீட்டில் உள்ள அனைவருக்கும்  இருக்கும் ஆசை தான் வீட்டின் பின் புறத்திலோ அல்லது  வீட்டின் முன்புறத்திலோ ஒரு தோட்டம் வைக்க வேண்டும் என்பது அனைவரது ஆசை தான்.
  • வீட்டில் என்ன செய்தாலும் அதற்கு வாஸ்து பார்த்து வைப்பார்கள். வாஸ்து என்பது ஆன்மிகம் வழியாக இருந்தாலும் அதனை அறிவியல் ரீதியாக சொல்வது என்ன என்பதையும் பார்ப்போம்.
  • வீட்டின் முன் புறத்திலும் பின் புறத்திலும் வேப்பமரத்தை வளர்ப்பது மிகவும் நல்லது. இந்த வேப்பமரத்தை பூச்சிக்கொல்லி மருந்தாகவும், அதன் குச்சிகளை பல்துவக்கும் பிரஸ்யாகும் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற வேப்பமரத்தில் உள்ள அனைத்தும் மருத்துவத்திற்கு உதவுகின்றன. அதனால் இதனை உங்கல் வீட்டின் தோட்டத்தில் இருப்பது மிகவும் நல்லது என்று ஆன்மிகம் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பலாமரம் பயன்கள்:

பலாமரம் பயன்கள்

மா பலா வாழை என்று சொல்வார்கள் இவை மூன்றும் எந்த விதத்திலும் உதவியற்றதாக  இருக்காது. இவைகள் அனைத்தும் முற்றிலும் பயனுள்ள வகையில் இருக்கும். அதிலும் பலாமரம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த பழத்தின் சுவை தனித்துவமாக இருக்கும். இதில் வரும் காற்றை சுவாசிப்பது உடலுக்கு நன்மையை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் இதன் தோல் முதல் அதனுடைய விதை வரை சாப்பிடுவதற்கு பயன்படுத்துவார்கள். அதனால் இதனை புனிதமாக கருதப்பட்டு வீட்டில் வளர்த்து வருகிறார்கள். வீட்டில் வளர்ப்பது உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களும் மிகவும் நல்லது.

வாழை மரம் பயன்கள்:

வாழை மரம் பயன்கள்

 

இந்த வாழை மரத்தை அனைத்திற்கும் உதவுகிறது, இதனுடைய இலைகள் சாப்பிடுவதற்கும், மரம் விழாக்களுக்கும், வாழைபழம், வாழைக்காய் என எல்லா விதத்திலும் இது உதவுகிறது. இதனை உங்கள் வீட்டில் கட்டாயம் வளர்க்கவேண்டும்.

தென்னை மரத்தின் பயன்கள்:

தென்னை மரத்தின் பயன்கள்

தென்னை மரம் இதனை நிறைய கல்யாணத்திலும் நிறைய விழாக்களிலும் கல்யாணம் முடித்து போகும் போது அனைவருக்கும் இதை வழங்குவார்கள். காரணம் இதை அழியாத ஒரு மரம் இதனுடைய வளர்ச்சியும் இதனுடைய பயன்பாடுகளும் அதிகம் இருக்கும். அது போல் அந்த விழாவை நடத்தியவரும் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்து செல்ல வேண்டும் என்பதற்கு இந்த மரங்களை வாங்குவார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்