குருவின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்..! ராஜயோகம் பெறப்போகும் ராசி நீங்களா..?

Advertisement

Guru Peyarchi Palangal 2023

இன்றைய ஆன்மிகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் கூற போகின்றோம். அந்த கால கட்டத்தை விட இந்த காலம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எவ்வளவு மாறி இருந்தாலும் ஆன்மிகம் மாறாத ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அதுபோல ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றது. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று ஏதாவது வந்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும். அந்த வகையில் இன்று குருவின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்..! அந்த பொற்காலத்தை அனுபவிக்கபோகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மார்ச் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது அனைத்தும் நடக்குமாம்..!

குருவின் அருளால் ராஜயோகம் கிடைக்க போகும் ராசிக்காரர்கள் யார்..? 

ஜோதிடர்களின் கூற்றுப்படி தெய்வங்களின் குருவான குரு பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். பல ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும் சந்திரனும் வியாழனும் இணைந்து கஜலக்ஷ்மி யோகம் உருவாகும்.

அதாவது குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். சந்திரன் ஏற்கனவே மேஷ ராசியில் தான் இருக்கிறார். குருவின் வருகையால் இவ்விரு கிரகங்களும் இணைந்து கஜலட்சுமி யோகத்தை உருவாக்கும். அதனால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்க போகிறது.

மேஷ ராசி:

மேஷ ராசி..

மேஷ ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தொடங்க போகிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு அவர்களின் திறமைக்கான பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். இந்த நாளில் பணவரவு அதிகமாக காணப்படும்.

இதையும் படியுங்கள்⇒ சனியின் பார்வையால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா..?

மிதுன ராசி:

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு அப்புறம் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல செய்திகள் பல உங்களை தேடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் முதலிடத்திற்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. திருமணமான மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். திருமணமாகாத ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும். முக்கியமான முடிவுகளை இப்பொழுது எடுக்கலாம். பணவரவு நிறைந்து காணப்படும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

கஜலக்ஷ்மி யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க போகிறது. திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தனுசு ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். குரு பகவான் தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சி செய்வதால் தொடங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும்.

சனியின் உச்சத்தால் மார்ச் 6 ஆம் தேதி முதல் இந்த ராசியாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement