தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்கள்..! அப்போ அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

இட்லி தீமைகள்

பொதுவாக நாம் அனைவருமே அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது இட்லி தான். இன்னும் சொல்லப்போனால் அனைவரின் வாழ்விலும் இரவு பகல் உணவாக இருப்பது இட்லி மட்டும் தான். அதுபோல இட்லியை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சரி அதை விடுங்க. இன்றைய பதிவு என்ன பதிவு என்று உங்களுக்கு தெரியுமா..? பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் எந்தளவிற்கு சத்துக்கள் இருக்கிறதோ, அதே அளவிற்கு தீமைகளும் இருக்கிறது. அந்த வகையில் இன்று இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்

இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

idli side effects

என்னது இட்லியிலும் தீமைகள் இருக்கிறதா என்று கேட்பீர்கள். ஆனால் அது தான் உண்மை. நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லியிலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் பண்புகள் இருக்கிறது. அதுபோல நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலும் பல்வேறு சத்துக்கள் இருக்கிறது. ஆனால் அதை நாம் ஒரு அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான். அதுபோல தான் மற்ற உணவு பொருட்களும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோல இட்லியை அதிகமாக உட்கொள்வதால் என்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

👉 உணவில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா

அஜீரண கோளாறுகள்:

idli side effects

பொதுவாக புளித்த உணவுகளில் இட்லியும் ஒன்று. அதுபோல இட்லியில் நார்ச்சத்து குறைவாகவே இருக்கிறது. அதனால் நாம் இட்லியை தினமும் உட்கொண்டு வருவதால் சிலருக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும் அஜீரண பிரச்சனைகள் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமில்லாமல் நெஞ்செரிச்சல், வீக்கம் மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றைத் தூண்டும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு:

நாம் அரிசியை ஊறவைத்து அரைப்பதால் இட்லியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இட்லியில் அதிக அளவு கலோரிகள் இருக்கிறது. அதன் காரணமாக நாம் இட்லியை அதிகமாக உட்கொள்வதால் அது உடல் எடையை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

👉 தினமும் சப்பாத்தி சாப்பிடுவரா நீங்கள்.. அப்போ அவற்றின் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்

நீரிழிவு நோயாளிகள் தினமும் இட்லி சாப்பிடலாமா..? 

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இட்லி  உட்கொள்வது நல்லது அல்ல. ஏனென்றால் அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. அதுபோல இட்லியில் இருக்கும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பயன்களை கொடுக்காது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement