இரத்த கொதிப்பு குணமாக | Ratha Kothippu Kunamaga

இரத்த கொதிப்பு நீங்க | Ratha Kothippu Kuraiya Tips in Tamil

Ratha Kothippu Kuraiya: வயது நாற்பதை தாண்டுதோ இல்லையோ உடலில் அனைத்து விதமான நோய்களும் நம்மை சுற்றி வந்துவிடுகிறது. இதற்கு காரணம் மாற்றம் அடைந்து வரும் நம்முடைய வாழ்க்கை முறைதான். உடலில் ஏற்படும் எந்த நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தினை நாம் அனைவரும் மறந்துவிட்டோம் என்பது தான் பலரும் அறிந்த உண்மை. சிறிய காய்ச்சல் என்றாலே மாத்திரை சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். இரத்த கொதிப்பு என்பது உடல் முழுவதும் ரத்தம் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும் போது, அதையே ரத்தக் கொதிப்பு என்று சொல்கிறோம்.
இயற்கை முறையில் உள்ள சிகிச்சைகளுக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று பலருக்கும் தெரிகிறது இல்லை. இந்த பதிவில் உடலில் ஏற்படும் இரத்த கொதிப்பு (ratha kothippu kuraiya) பிரச்சனைக்கு வீட்டிலே இயற்கை முறையில் நிரந்தரமாக குறைக்க பல வழிகள் உள்ளன. அவற்றை நாம் அனைவரும் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் குறைய டிப்ஸ்..!

இரத்த கொதிப்பு அளவு:

இரத்த கொதிப்பின் நிலை  சுருக்கழுத்தம்  விரிவழுத்தம் 
அழுத்தம் எப்படி இருக்க வேண்டும்  <120 <80
இரத்த கொதிப்புக்கு முந்தைய நிலை  120-139 80-89
லேசான இரத்த கொதிப்பு  140-159 90-99
மிதமான இரத்த கொதிப்பு  160-179 100-109
அதிக இரத்த கொதிப்பு  >180 >110

இரத்த கொதிப்பு குணமாக வாழைப்பழம்:

இரத்த கொதிப்பு குணமாக வாழைப்பழம்பழ வகைகளில் மிக எளிமையாக கிடைக்க கூடியது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் 10% வரை சோடியத்தின் அளவினை குறைக்கிறது வாழைப்பழம். தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிட்னி வலுப்பெறும், அதோடு இரத்த கொதிப்பு பிரச்சனைக்கு மிகவும் வாழைப்பழம் நல்லது. 

இரத்த கொதிப்பு நீங்க செலரி:

ratha kothipu neengaகொத்தமல்லி இலையை சேர்ந்தது தான் செலரி கீரை. செலரி கீரையில் உள்ள வேதிப்பொருள்கள் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தினை குறைத்துவிடும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க செலரி கீரை மிகவும் உதவிகரமாக இருக்கும். இரத்த கொதிப்பு பிரச்சனைக்கு செலரி கீரை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் அடையலாம். 

இரத்த கொதிப்பு குறைய பாட்டி வைத்தியம்:

இரத்த கொதிப்பு குறைய பாட்டி வைத்தியம்மன அழுத்த பிரச்சனைக்கு தினமும் மிளகு சாப்பிடுவது நல்லது. மிளகானது இரத்த ஓட்டத்தினை சரியாக வழிநடத்தி செல்ல உதவியாக இருக்கிறது. இரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினம்தோறும் வெறும் வயிற்றில் மிளகு சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 

இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..!

இரத்த கொதிப்புக்கு வெங்காயம்:

 இரத்த கொதிப்பை குறைக்கவெங்காயம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. வெங்காயம் சாப்பிடுவதால் இரத்த கொதிப்பானதுக் கட்டுப்பாட்டிற்குள் வரும். வெங்காயத்தில் இருக்கும் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட் இரத்த கொதிப்பினை குறைக்கும் சக்தி கொண்டது. மேலும் மன அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயம் சாப்பிட்டு வரலாம். 

இரத்த கொதிப்பு குறைய தேன்:

இரத்த கொதிப்பு குறைய தேன்தேன் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உடல் அழகு பெறவும் முக்கியத்துவம் வகிக்கிறது. தினமும் தேன் சாப்பிடுவதால் இதயத்தில் அழுத்தம் குறைந்து காணப்படும். தேனில் அதிகமாக அமினோ ஆசிட் இருப்பதால் இரத்த கொதிப்பு வராமல் தடுத்து நிறுத்துகிறது. மேலும் இரத்த கொதிப்பால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் தேனை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பின் அளவு குறைந்து காணப்படும். 

இரத்த கொதிப்பு நீங்க பூண்டு:

இரத்த கொதிப்பு நீங்க பூண்டு

இரத்த கொதிப்பு உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். பச்சை பூண்டினையோ அல்லது சமைத்த பூண்டினையோ தினமும் சாப்பிட்டு வர உடலில் இரத்த கொதிப்புக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பூண்டில் உள்ள அல்லிசின் எனும் வேதிப்பொருள் இரத்த ஓட்டத்தினை சீராக்கி இரத்த கொதிப்பு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறது. 

இரத்த கொதிப்பை குறைக்க வெந்தயம்:

இரத்த கொதிப்பை குறைக்க வெந்தயம்

வெந்தயம் இரத்த கொதிப்பு பிரச்சனைக்கு மிகவும் நல்லது. வெந்தயம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. வெந்தயத்தில் சோடியத்தின் அளவானது மிகவும் குறைவாகத்தான் உள்ளது. முக்கியமாக வெந்தயத்தில் அதிகளவு பொட்டாசியமும், நார்ச்சத்தும் உள்ளதால் இரத்த கொதிப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வினை கொடுக்கும்.

இரத்த கொதிப்பு குறைய பாட்டி வைத்தியம்:

இரத்த கொதிப்பு குறைய பாட்டி வைத்தியம்

நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க எலுமிச்சை பழம் மிகவும் நன்மை பயக்கிறது. எலுமிச்சையில் அதிகமாக ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளதால் இரத்த ஓட்டத்தினை சீராக வைத்திருக்கும். இரத்த கொதிப்பு உள்ளவர்கள் தயக்கம் இல்லாமல் எலுமிச்சை பழத்தினை சாப்பிட்டு வரலாம். 

இரத்த கொதிப்புக்கு தர்பூசணி:

இரத்த கொதிப்புக்கு தர்பூசணிதர்பூசணி பழத்தில் குக்கூர்பிட்டசின் எனும் சொல்லக்கூடிய வேதிப்பொருள் உள்ளன. தர்பூசணி பழம் சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்குவது மட்டுமல்லாமல் நாள் முழுவதும் உடலை சோர்வடையாமல் பிரெஷாக வைத்திருக்கும். தர்பூசணியில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தினையும் குறைத்து உடலில் இரத்த கொதிப்பு பிரச்சனையும் சரி செய்கிறது. 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil