காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

skipping breakfast is bad for health in tamil

காலை உணவை தவிர்ப்பது

இன்றும் பலரும் காலை உணவு சாப்பிடுவது இல்லை. வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணத்தை சம்பாரிப்பதற்காக ஓடுபவர்கள் ஆரோக்கியத்தை சம்பாரிப்பதற்கு மறந்துவிடுகிறார்கள். காலை உணவு சாப்பிடாமல் நீங்கள் மதியம் சேர்த்து வைத்து சாப்பிட்டாலும் உடலுக்கு பிரச்சனை வரும். காலை உணவை தவிர்ப்பவர்கள் இந்த பதிவை படித்த பிறகாவது காலை உணவை சாப்பிடுங்கள். வாங்க காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி காண்போம்.

இதையும் படியுங்கள் ⇒ சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்களுக்கு தீர்வு

பசி உணர்வு:

காலை உணவை தவிர்ப்பதால் டோபமைன் (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) என்று நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இதனால் படபடப்பு, எரிச்சல் உணர்வு போன்ற மாற்றங்கள் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் போது என்ற வார்த்தையே வராது.

உடல் எடை அதிகரிக்க:

சில நபர்கள் உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்கள் மதியம் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது.

இரத்த சர்க்கரை அளவு:

காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் வருவதற்கு உணவு முறை தான் காரணம். அதனால் காலை உணவு சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

மூளை செயல்திறன் குறைபாடு:

காலை உணவை தவிர்ப்பதால் மூளையின் செயல்பாடு குறையும். வேளைகளில் முழு கவனத்துடன் செயல்பட முடியாது. சுறுசுறுப்பாக இருக்க முடியாது. அதனால் காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

மன அழுத்தம் பிரச்சனைகள்:

காலை உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு கோவம் அதிகமாக வரும். மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம்:

காலையில் எதுமே சாப்பிடாமல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பித்துவிடும். நீங்களும் வேலை செய்ய முடியாமல் சோர்வடைவீர்கள்.

அல்சர் பிரச்சனை:

காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தால் வயிறு மற்றும் வாய்களில் அல்சர் பிரச்சனை ஏற்படும். அதனால் காலை உணவு சாப்பிடாமல் இருக்காதீர்கள்.

வாய் நாற்றம் வர காரணம்:

காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் கிருமிகள் அதிகமாகும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

காலை உணவு சாப்பிடாமல் இருந்தால்  இவ்வளவு பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. இனிமேலாவது காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களின் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்