கேரட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Carrot Juice Side Effects in Tamil

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் அனைவருடைய கண்ணையும் கவரக்கூடிய ஆரஞ்சு நிறத்தில் உள்ள கேரட்டின் நன்மைகள் நமக்கு தெரியும். அதில் நமக்கு தெரியாத ஒன்றும் இருக்கிறது. சமையலுக்கு பயன்பட கூடிய கேரட்டை பொரியல், வறுவல், அல்வா, ஜூஸ் என நிறைய உணவு முறைகளில் சாப்பிட்டு வருகிறோம். சிலர் கேரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி நாம் குடிக்க கூடிய கேரட் ஜூஸில் தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் நமது உடலில் எந்த மாதிரியான பிரச்சனையை வரவைக்கிறது என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடிக்கிறீங்களா..? அப்போ இதை                        தெரிஞ்சிக்கோங்க..!

கேரட் ஜூஸ்:

  • கேரட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கண்பார்வை நன்றாக தெரியும். அதுபோல கண்புரை நோய் வராமல் தடுக்க முடியும்.
  • தினந்தோறும் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து அதன் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
  • அதுமட்டும் இல்லாமல் கேரட்டை தினமும் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் விரைவில் குணமடையும்.

கேரட் ஜூஸ் தீமைகள்:

கேரட்டில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன அதனால் நாம் சாப்பிடலாம் இருந்தாலும் அதை அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்கவிளைவுகள் ஏற்படும்.

இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

அலர்ஜி உணவு:

அலர்ஜி உணவு

ஒரு சிலருக்கு கேரட் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் தோல் அலர்ஜி, படை, வீக்கம், வயிற்றுப்போக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும். ஆகையால் கேரட் சாப்பிட்டால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள்:

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சர்க்கரையின் அளவை காட்டும் கினைகமிக் குறியீடு கேரட்டில் 97 உள்ளது. கேரட்டில் உலா சர்க்கரைப்பொருள் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடலில் சரக்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். அதனால் சர்க்கரை நோயாளிகள் கேரட் ஜூஸ் குடிக்காமல் கேரட்டை அவித்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்:

paluttum thaimargal in tamil

பொதுவாக கேரட்டில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் உள்ளன. எனவே பாலூட்டும் தாய்மார்கள் கேரட் ஜூஸ் குடிப்பதால் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுகிறது.

ஹார்மோன் பிரச்சனை:

hormone problem tamil

கேரட் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்று தான். அப்படி இருந்தாலும் கூட சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள், சர்க்கரை குறைவு பாதிப்பு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கேரட் சாப்பிட்டால் உடலுக்கு அதிகப்படியான பாதிப்பை தரும்.

பூச்சிக்கொல்லிகள்:

கேரட் ஜூஸ் தீமைகள்

கேரட்டில் மொத்தம் 26 பூச்சி கொல்லிகள் இருப்பதாக ஆய்வில் சொல்லப்படுகிறது. அதில் 8 பூச்சி கொல்லிகள் புற்று நோயை உண்டாக கூடியதாகவும், 16 ஹார்மோன் செயல்பாட்டை தடுக்க கூடியதாகவும், 3 நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியதாகவும், 7 வளர்ச்சி பிரச்சனை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது. அதனால் எதையும் அளவோடு எடுத்தோக்கொள்ள வேண்டும் அதுவும் மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிட வேண்டும்.

அதுபோல கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு விட்டு தீடிரென சாப்பிடுவதை நிறுத்த கூடாது. மன எரிச்சல், தூக்கமின்மை, பதற்றம், புளித்த ஏப்பம் இதுபோன்ற பிரச்சனைகளை தரும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

 

Advertisement