சொரியாசிஸ் அறிகுறிகள் | Psoriasis Symptoms in Tamil

Advertisement

சொரியாசிஸ் அறிகுறி | Psoriasis Starting Symptoms in Tamil

Psoriasis Arikurigal: வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் சொரியாசிஸ் நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். சருமத்தில் ஏற்படும் முக்கியமான நோய்களுள் ஒன்று இந்த சொரியாசிஸ். சருமத்தை மட்டும் எல்லா காலத்திலும் நாம் பாதுகாக்க வேண்டும். மழைக்காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி சரும பிரச்சனையானது வந்துக்கொண்டே தான் இருக்கும். சருமத்தில் ஏற்படும் நோய் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது படர்தாமரை, சொரியாசிஸ், அலர்ஜி தான். அந்த வகையில் இந்த பதிவில் சொரியாசிஸ் நோய்க்கான அறிகுறி என்னென்ன உள்ளது என்பதை அனைவரும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்

சொரியாசிஸ் அறிகுறி:

 உடலில் பல இடத்தில் அதாவது முழங்கால், காது பின்புறம், தலை இவற்றில் வட்ட வடிவ உலர்ந்த திட்டுகள் அதிலிருந்து வெண்ணிற பொடுகு போன்று உதிர்தல் தன்மை, அரிப்பு, சொரியாசிஸ் உள்ள இடத்தில் சொரியும் போது ரத்தச்கசிவு ஏற்படுதல், அக்குள் பகுதி அல்லது மார்பகங்களுக்கு கீழே அல்லது இடுப்பில் அல்லது தொடை இடுக்குகளில் கருப்பு நிற படை, தோல் உரிதல், அரிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை காணப்படும். 

Psoriasis Starting Symptoms in Tamil:

சருமத்தில் இருக்கக்கூடிய செல்கள் சீக்கிரம் இறப்பதினால் இந்த சொரியாசிஸ் வருகிறது. சொரியாசிஸானது உடலில் மற்றும் சருமத்தில் ஆங்காங்கே தடித்து போனது போன்று இருக்கும். இதனை நாம் கை வைத்து தேய்க்கும் போது அதிகமாக அரிப்பினை ஏற்படுத்தும்.

சருமத்தில் அரிப்பு இருந்தாலும் அந்த இடத்தில் கை வைத்து சொரிய கூடாது. அப்படி சொரிந்தால் அந்த இடத்தில் உள்ள செதில்கள் உதிர்ந்து விழும். மேலும் இது சரியாக கால அளவும் அதிகரிக்கும். அதனால் உங்களால் முடிந்தவரை சொரியாமல் இருப்பது நல்லது.

சொரியாசிஸ் பாதிப்பு:

சொரியாசிஸ் யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு சிறிய வயதிலிருந்தே இருக்கும்.

சிலருக்கு சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூட்டு வலியும், வீக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நக பாதிப்பு இருப்பவர்களுக்கு நகத்தில் குளி விழுவதும், நகங்களில் கருமையான தடிப்பு உண்டாகலாம்.

தோல் நோய் நீங்க மருத்துவம்

சொரியாசிஸ் நோய்க்கு என்ன செய்ய வேண்டும்:

சருமம் எப்போதும் வறட்சி நிலையில் இருந்தால் இந்த சொரியாசிஸ் ஏற்படும். அப்போது தான் நமக்கு அதிகமாக அரிப்பையும், புரை ஏற்படும். அதனால் சருமத்தை எப்போதும் குளிர்ச்சியான நிலையில் வைத்திருங்கள்.

சொரியாசிஸ் தவிர்க்க வேண்டிய உணவு:

புளிப்பு அதிகம் உள்ள உணவினை தவிர்த்துவிடுங்கள். மழைக் காலங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சொரியாசிஸ் நோய்க்கு ஏற்ற உணவு:

 அதிகமாக சொரியாசிஸ் நோய் உள்ளவர்கள் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இது சொரியாசிஸ்  பிரச்சனையை அதிகரிக்காமல் பாதுகாக்கும். அதனால் கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் மீன் அல்லது எள், ஆளி விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

சொரியாசிஸ் சிகிச்சை:

உடலில் உங்களுக்கு வேறு ஏதேனும் நோய் இருந்தால் அதற்கு நீங்கள் மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் சொரியாசிஸ் குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சில நேரத்தில் மருந்து மாத்திரைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தி சொரியாசிஸை அதிகப்படுத்தும்.

அலோபதி, ஹோமியோபதி, சித்தா போன்ற இயற்கை மருந்துகளை எடுப்பவர்கள் மருத்துவரிடம் சொரியாசிஸ் நோய்க்கு ஆலோசனை பெற்று அதன்பிறகு தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலேசனைகேற்ப சிகிச்சையை மேற்கொண்டால் சொரியாசிஸ் நோயிலிருந்து நல்ல பலன் பெறலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement