நெஞ்சு சளி வறட்டு இருமல் குணமாக வீட்டு வைத்தியம்..!
பொதுவாக நமது உடல் சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி ஆகும். இந்த சளி இயல்பாக முறையாக வெளியேறும் போது உடலில் எந்த ஒரு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. ஆனால் நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது.
உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது. கட்டிபட்டுப்போன சளியை வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது. சரி இந்த பதிவில் நெஞ்சு சளி அறிகுறிகள் மற்றும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளை படித்தறியலாம் வாங்க.
நெஞ்சு சளி அறிகுறிகள்:
பொதுவாக உருவத்துக்கு நெஞ்சு சளி அதிகமானால் அதிக சளி, இருமல், வறட்டு இருமல், தும்மல், நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு, ஈளை நோய், இளைப்பு, காய்ச்சல் வருவது போல் உணர்வு, தலைவலி, தலை பாரம், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, உடல் சோர்வு, மூச்சிவிடுவதில் சிரமம் என்று பல வகையான அறிகுறிகள் தோன்றும். சரி இந்த நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம் என்னென்ன உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம்
நெஞ்சு சளியை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் நெஞ்சு சளியை குணப்படுத்த முடியும். இதற்கு சிறந்த இயற்கை வைத்தியம் இதுவேதான் எலுமிச்சை சாறினை இதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
நெஞ்சு சளி நீங்க:
நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
Nenju Sli Neenga Nattu Maruthuvam:
மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூளை பாலுடன் சேர்த்து கலந்து காய்ச்சுங்கள். இந்த பாலை மிதமான சூட்டில் அருந்த வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் அருந்தி வந்தால் பிரச்சனை குணமாகும்.
நெஞ்சு சளி வெளியேற:
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
Nenju Sali Home Remedy in Tamil:
புதினா இலை, மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.
Nenju Sli Neenga:
இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.
நெஞ்சு சளி நீங்க நாட்டு மருத்துவம்:
தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
Nenju Sali Veliyera:
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.
இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |