பல் ஈறு பலம் பெற | Strong Teeth Tips in Tamil

பல் ஈறு பலம் பெற உணவுகள் | Teeth Strong Tips in Tamil

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்ற சொல்லிற்கு ஏற்ப நம் பல் மற்றும் ஈறுகளுக்கு நல்ல ஆரோக்கியம் உள்ள உணவுகள் மிகவும் அவசியம். நாம் எந்த அளவிற்கு ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுகிறோமா அதை பொறுத்து தான் நம் பல்லும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி பல் உறுதியாக இருப்பதற்கு என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. பல் ஆடுவதற்கான முக்கிய காரணம் ஈறுகள் உறுதியாக இல்லாமல் இருப்பது தான்.

பல் ஈறு பலம் பெற உணவுகள்:

Strong Teeth Tips in Tamil – சீஸ்:

teeth strong tips in tamil

 • பல் உறுதியாக சீஸ் சாப்பிடுவது நல்லது. சீஸ் சாப்பிடுவதால் உமிழ் நீர் சுரந்து பல்லை மேலும் உறுதிப்படுத்துகிறது.
 • Sugar Free Gum சாப்பிடுவதால் நமது வாயில் உமிழ் நீர் சுரக்கும். அப்படி உமிழ் நீர் சுரப்பதால் ஈறுகள் மற்றும் பல்லை வலுவாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

பல் ஈறு பலம் பெற – தண்ணீர்:

பல் ஈறு பலம் பெற

 • தண்ணீர் குடிப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதால் ஈறுகள் வறட்சி ஆகாமல் பார்த்து கொள்கிறது. மேலும் தண்ணீர் சத்தை உடலுக்கு கொடுக்கிறது. ஈறுகள் உறுதியாக இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது.

ஈறுகள் உறுதியாக பால்:

பல் ஈறு பலம் பெற

 • பாலில் வைட்டமின் டி மற்றும் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் உணவில் பாலை சேர்த்து கொள்வது நல்லது. பாலை தினசரி குடிப்பதன் மூலம் உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி ஈறுகளை சரி செய்யவும் உதவுகிறது.

Teeth Strong Tips in Tamil – ஆப்பிள்:

teeth strong tips in tamil

 • தேனீர், உலர் பழங்கள் (Dried fruits), நட்ஸ் வகைகள், ஆரஞ்சு, ஆப்பிள், தயிர் மற்றும் உணவு காளான் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. இது போன்ற உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியமான பற்களை பெறலாம்.

பல் ஈறு வலி வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

 1. பெருஞ்சிரகம் – 1 டேபிள் ஸ்பூன்
 2. கிராம்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 3. கடுக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 4. அதிமதுரம் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
 5. மாதுளை பழத்தின் தோல் – 1 டேபிள் ஸ்பூன் (மாதுளை தோல் பொடி)

செய்முறை:

strong teeth tips in tamil

 • மாதுளை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து பின் அதனை பொடியாக்கி கொள்ளவும்.
 • பெருஞ்சிரகம் (சோம்பு) 1 டேபிள் ஸ்பூன் எடுத்து அதனை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
 • பின் 1 டேபிள் ஸ்பூன் கிராம்பு பொடி, 1 டேபிள் ஸ்பூன் கடுக்காய் பொடி, அதிமதுரம் பொடி 1 டேபிள் ஸ்பூன், பின் நாம் அரைத்து வைத்த மாதுளை பழத்தின் தோல் பொடியை 1 டேபிள் ஸ்பூன் மற்றும் சோம்பு பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
 • பின் இந்த பொடியை வைத்து காலை பல் துலக்கி கொப்பளிக்க வேண்டும். இந்த பற்பொடியை பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் மற்றும் பல் உறுதி பெரும். பல் துலக்கும் போது ஆள்காட்டி விரலை பயன்படுத்துவது நல்லது. ஆள்காட்டி விரலை பயன்படுத்துவது ஆசனத்தில் ஒன்றாக கருதப்படுகிறது. மலச்சிக்கலை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
 • இது போன்ற பற்பொடியை பயன்படுத்துவதால் பல் உறுதியாக இருப்பது மட்டுமின்றி வாயில் உள்ள கிருமிகள் அழியும்.
மஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்?
குழந்தை பல் வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil