அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய இதை செய்து பாருங்கள்..!

adivairu thoppai kuraiya

அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய

வணக்கம் நண்பர்களே..!இன்று நாம் பார்க்கபோவது ஒரு மருத்துவ குறிப்புதான் அதுவும் அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையதான் மருந்து பார்க்கப்போகிறோம். பொதுவாக நம்மில் பலருக்கும் இந்த தொப்பை என்ற ஒரு பிரச்சனை உள்ளது. ஆனால் இதை எப்படி குறைப்பது என்று யோசிச்சி யோசிச்சி பல மருந்துகளை உபயோகித்தும் எந்த பயனுமில்லாமல் போயிருக்கும். ஆனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள் சரி வாங்க பதிவினுள் செல்லலாம்..!

கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா.?

அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய:

இன்றைய காலகட்டத்தில் தொப்பை என்பது ஆண் பெண் இருவருக்கும் உள்ளது அதுவும் பெண்களுக்கு இது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. பொதுவாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகுதான் இந்த தொப்பை பிரச்சனை இருக்கும். இந்த தொப்பை பிரச்னையை குறைக்க மிகவும் எளிய மருத்துகளைத்தான் இப்பொழுது  பார்க்க போகிறோம்.

நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்:

amla juice benefits in tamil

அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும் நெல்லிக்காயை முழுதாக சாப்பிடாமால்.அதனை ஒரு ஜூஸ்சாக போட்டு தினமும் சாப்பிட்டுவந்தால் அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய வாய்ப்புள்ளது.அந்த நெல்லிக்காய் ஜூஸிற்கு தேவையான பொருட்கள்.

  • நெல்லிக்காய் –
  • இஞ்சி – சீறிய துண்டு 
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு  

இவை அனைத்தையும் ஜூஸ்சாக போட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டாலும் அப்படி இல்லையென்றால் 11 மணிக்கு சாப்பிட்டுவந்தாலும் அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுரைக்காய் சூப் பயன்கள்:

bottle gourd soup in tamil

அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க சுரைக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். நாம் எடுக்கும் சுரைக்காய் நாட்டு சுரைக்காயை இருந்தால் நல்லது . இந்த சுரைக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து பிறகு அதை ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து சூப்புபோல் செய்து சாப்பிட்டுவந்தால் அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருஞ்சீரகம் தேநீர் :

black cumin tea recipe in tamil

அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க கருசிரகமும் ஒரு சிறந்த மருந்தாகும்.கருசிரகத்தை டீ யாக போட்டு சாப்பிட்டுவதாலும் நம்முடைய அடிவயிற்றில் உள்ள தொப்பை குறையும். கருசிரகத்தை ஒரு மிக்சிஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடியாக தயார்செய்து அதனை ஒரு 1/4டீஸ்பூன் எடுத்து 150 மீ.லீ வெந்நீரில் ஒரு டீ மாதிரி போட்டு குடித்து வந்தாலே அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுண்டைக்காய் பயன்கள்:

sundaikai benefits in tamil

நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருளான சுண்டைக்கையும் அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்க ஒரு சிறந்த மருந்தாகும். என்யென்றால் சுண்டைக்காய் ஒரு சிறந்த மலநீக்கியாகவும் உடலில் உள்ள தேவையற்ற வாயுக்களை வெளியேற்றிடும். இதனால் இந்த சுண்டைக்காயை தினமும் நம்முடைய உணவில் சேர்த்து கொள்ளுவதால் நம்முடைய அடிவயிற்றில் உள்ள தொப்பையை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பருத்தி பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் | Cotton Seed Milk Benefits in Tamil

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil