அலர்ஜி எதனால் வருகிறது
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உடல் அலர்ஜிகளை தடுக்கும் சில முக்கியமான உணவு பொருட்களை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே உடலில் சிலருக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகளாலும், இரத்தத்தில் ஏதேனும் கிருமிகளின் பிரச்சினைகளாலும் அல்லது நாம் சாப்பிடும் உணவு முறைகளாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது போன்ற பிரச்னைகளை சரி செய்வதற்கு, எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க.
தோல் அரிப்பு இயற்கை மருத்துவம் |
உடல் அலர்ஜி நீங்க:
உடல் அலர்ஜிகள் சிலருக்கு மாசடைந்த காற்று, தூசி போன்றவற்றாலும் சிலருக்கு உடலில் அரிப்பு அலர்ஜி ஏற்படுகிறது. சிலருக்கு நோய் எதிர்ப்பு குறைபாடாலும் உடலில் அலர்ஜிகளை ஏற்படுத்துகிறது.
இவை பொதுவாக தும்மலில் இருந்து தொடங்கி சளி பிரச்சனைகளான ஆஸ்துமா போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது போன்ற அலர்ஜிகளில் அவதிப்படுபவர்கள் நல்ல உணவுகளை சாப்பிட்டால், அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம், அவை என்ன உணவுகள் என்று பார்க்கலாம்.
பசலைக்கீரையில் எல்லா விதமான வைட்டமின்களும், மினரல்களும் அதிகமாக அடங்கி உள்ளது. எனவே பசலைக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான அலர்ஜி பிரச்சனைகளை தடுக்கலாம்.
அதேபோல் உணவு சாப்பிட்ட பிறகு ஆப்பிள் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவது மட்டுமில்லாமல் உடல் அலர்ஜியையும் கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஆஸ்துமா, தும்மல், போன்ற உடல் அலர்ஜிகள் எதுவும் ஏற்படாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும்.
வாழைப்பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் தூசியில் ஏற்படும் அலர்ஜிகள் போன்றவற்றை தடுக்கலாம்.
அவகோடா பழத்தில் உள்ள Antioxidants அதிகமாக உள்ளதால் இதை சாப்பிடுவதன் மூலம், நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களில் உள்ள தொற்றுகளை தடுத்து அலர்ஜியை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது.
பூண்டு தினமும் உணவில் சேர்த்து வந்தால் நுரையீரல் பலப்பட்டு ஆஸ்துமாவில் தோன்றும் அலர்ஜிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி அலர்ஜிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
இஞ்சிகளில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளனர். இது பெரும்பாலும் மருந்துகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிப்பு அலர்ஜிகள் உள்ளவர்கள் இஞ்சியை தேநீர் செய்த்து குடிப்பதால் உடல் அலர்ஜியை சரி செய்ய உதவியாக இருக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |