
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் | Cancer Symptoms in Tamil
பொதுவாக எல்லோருக்கும் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், புற்றுநோய் என்று சொன்னால் எல்லாருக்கும் பெரிய அளவில் பயம் வரும். சிலர் அதனை நினைத்தே உடல் சரி இல்லாமல் போய்விடும். இப்போது எல்லாத்திலும் மாற்றம் உள்ளது போல் நோய்களிலும் முன்னேற்றம் வந்துவிட்டது. முதலில் புற்றுநோய் மட்டும் சொல்வார்கள் இப்பொழுது வாய்ப்புற்று நோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் என்று நிறைய பெயர்களில் புற்று நோய்கள் உருவாகிவிட்டது. இப்போது இந்த பதிவில் ஆசனவாய் புற்றுநோய் பற்றி பார்க்க போகிறோம் அதற்கான அறிகுறிகள் என்னவென்றும் படித்து தெரிந்துகொள்ள போகிறோம்.
ஆசனவாய் புற்றுநோய்:
- ஆசனவாய் புற்றுநோய் என்பது உடலில் இரைப்பை குடல் அமைப்பின் ஒரு அரிய வகை புற்றுநோய் ஆகும். இது குடல் பகுதியில் ஒரு சிறிய சதவீதம் ஏற்படுகிறது, ஆசன வாய் புற்றுநோய் என்பது ஆசனவாய் அல்லது (குத) குடல் கால்வாய், மலக்குடலின் இறுதி பகுதியில் ஏற்படும் புற்றுநோய் ஆகும்.
ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகள்:
- ஆசனவாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய அறிகுறிகள். ஆசன வாயிலில் வலி மற்றும் இரத்த போக்கு. பவுத்திர மூலம் (குடல் கால்வாய் மற்றும் இடுப்புச் சருமத்திற்கு இடையில் உள்ள அசாதாரணமான குறுகிய குடைவு-வடிவ இணைப்பு) அல்லது வெண்படல் இருந்தால் அது ஆசனவாய் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்.
- உடலில் சிறுநீரக வீக்கம் ஏதேனும் தனித்துவமான உணர்ச்சிகள் வலிகள் இருந்தால் அதனை ஆசனவாய் புற்றுநோய் அறிகுறிகள் ஆகும்.
- ஆசன வாய் பகுதியில், கட்டி தோன்றுவது அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஆசனவாய் புற்றுநோய் அறிகுறியாகும்.
- மலப்போக்கை கட்டுப்படுத்தி, மலம் கழிக்க முடியாமல் வலிகள் இருந்தால் அதனையும் ஆசனவாய் புற்றுநோய் அறிகுறியாகும்.
- கல்லிரல் கோளாறுகள் ஸ்கேன் செய்தலில் கட்டி இருப்பது போல் காணப்பட்டால் அதையும் ஆசன புற்றுநோய் அறிகுறிகள் ஆகும்.
- பசியின்னை அதிகமாக இருக்கும். இல்லையேற்றாலும் நாம் சாப்பிட்டாலும் அதனை உடல் ஏற்றுக்கொள்ளாது.
- இந்த ஆசனபுற்று நோய் வருவது ஏன் என்றால்? ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் அதனால் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அதனாலும் ஆசன புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் ஆகும்.
- ஆசன வாய்புற்று நோய் கண்ணுக்கு தெரியாமல் உடலிருந்து வெளி வரும் அதனை மலம் பரிசோனையில் தெரிந்துகொள்ளலாம். மலம் கழிக்கும் பொழுது அதிலிருந்து இரத்தம் வெளிவரும் இது பரிசோதனையில் தெரியவரும். அதன் பின் குடலில் கட்டிகள் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்வார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆரோக்கியமும் நல்வாழ்வும் |