ஆஸ்துமா வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?

asthma symptoms in tamil

ஆஸ்துமா அறிகுறிகள் | Asthma Symptoms in  Tamil

வணக்கம் ஆரோக்கிய பதிவு நண்பர்களே..! இந்த நவீன காலத்தில் ஏராளமான நோய்கள் பரவி வருகின்றன. அந்த நோய்களின் வரிசையில் ஆஸ்துமாவும் ஒன்று. இந்த ஆஸ்துமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. அதுபோல பருவ நிலை மாற்றம் என்றால் இந்த நோயால் பாதிக்கபட்டவர்கள் அதிகமாக அவஸ்தைப்படுவார்கள். இத்தகைய நோய் வருவதை எப்படி தெரிந்துகொள்வது என்பதற்கான அறிகுறியினை இன்றைய பொதுநலம். காம் பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

மூளை காய்ச்சல் அறிகுறிகள்

ஆஸ்துமா வகைகள்:

ஆஸ்துமாவில் 5 வகைகள் இருக்கின்றன. அந்த வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. மூச்சுக்குழாய் ஆஸ்துமா
  2. ஒவ்வாமை ஆஸ்துமா
  3. இருமல் சளி ஆஸ்துமா
  4. ஆஸ்ப்ரின் ஆஸ்துமா 
  5. இரவு நேர ஆஸ்துமா

ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்:

ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கும் போது அவருடன் நெருங்கி பழகுதல் மற்றும் அவருடன் இருத்தல் போன்ற செயல்களை செய்யும் போது ஆஸ்துமா மற்றொருவருக்கு வருகிறது. ஏனென்றால் ஆஸ்துமா ஒரு வைரஸ் என்பதால் அது மற்றொருவருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது.

நமது உடலில் அலர்ஜி பிரச்சனை இருக்கும் போது நச்சு கலந்த காற்றினை சுவாசித்தல் மற்றும் செல்ல பிராணிகளுடன் விளையாடுதல் போன்றவற்றை செய்தால் ஆஸ்துமா வருவதற்கான காரணம் ஆகும்.

இருமல், சளி பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக குளிர்பானங்களை குடிக்க கூடாது. இதுவும் ஆஸ்துமா வருவதற்கான ஒரு காரணமாகும்.

புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

ஆஸ்துமா அறிகுறிகள்:

மூச்சுத்திணறல்:

மூச்சுத்திணறல்

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்கள் மூச்சை உள் வாங்கினாலும் வெளியே விடுவதற்கு சிரமப்படுவார்கள். மூச்சு திணறல் அதிகமாகி நுரையீரல் சுருங்க செய்யும்.

இருமல், சளி:

ஆஸ்துமா உள்ளவர்கள் இருமும் போது நெஞ்சு வலி ஏற்படும் மற்றும் நெஞ்சுக்குள் இருக்கும் சளி அதிகமாகி நுரையீரலை பாதிக்க ஆரம்பிக்கும். இருமல் அதிகமாகி சளியுடன் இரத்தமும் வெளி வரும். இருமல் வரும் போது இத்தகைய பிரச்சனை இருந்தால் அது ஆஸ்துமா அறிகுறியாகும்.

தூங்குவதில் சிக்கல்:

தூங்குவதில் சிக்கல்

சளி அதிகாமாகி அடுத்தக்கட்ட நிலையில் மூச்சுத்திணறல் வந்துவிடும். இந்த மூச்சுத்திணறல் பிரச்சனையால் இரவில் சரியான தூக்கம் இருக்காது. அதே போல நீங்கள் பேசுவதில் சிரமம் மற்றும் பேசும்போது மார்பு பகுதியில் இறுக்கம் ஏற்படுதல் இதுவும் ஆஸ்துமா அறிகுறியாகும்.

உடல் எடை குறைவு:

நீங்கள் எந்த வித உடற்பயிற்சியும் செய்யாத போது திடீரென உடல் எடை குறைவு மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனை இருந்தால் இது ஆஸ்துமா அறிகுறியில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட மருத்துவரை அணுகி வரும் முன் காப்பதே நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்