நம் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் கருப்பு எள்..!

Black Sesame Seeds in Tamil

 Black Sesame Seeds Benefits in Tamil

வணக்கம் அன்பார்ந்த நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் கருப்பு எள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அனைவருமே ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த வகையில் கருப்பு எள்ளில் என்னென்ன  நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள் 👉 எள் உருண்டை பயன்கள்

கருப்பு எள் நன்மைகள்: 

கருப்பு எள்

பொதுவாக நம் வீட்டு சமையலறையில் காணப்படும் பொருள்களில் ஒன்று தான் எள்.  இந்த எள் மருத்துவ குணம் நிறைந்த விதைகள் என்று கூறுவார்கள்.

கருப்பு எள் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எள் மதிப்புமிக்க எண்ணெய் வித்து தாவரம் என்று கூறலாம். எள் இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படும் ஒரு தாவரமாகும்.

கருப்பு எள்ளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இரத்த அழுத்தம் சீராக:

இரத்த அழுத்தம் சீராக

கருப்பு எள் நாம் அன்றாடம் உணவில் கலந்து சாப்பிட்டு வருவதால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை தடுக்க முடியும். இந்த கருப்பு எள்ளில் மக்னீசியம் அதிகம் இருப்பதால் அது இரத்த அழுத்த பிரச்சனையை சரி செய்கிறது. கருப்பு எள் சாப்பிட்டு வருவதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

செரிமான கோளாறுகளை தடுக்க:

செரிமான கோளாறுகளை தடுக்க

கருப்பு எள் செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. இந்த கருப்பு எள்ளில் நார்ச்சத்து மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இது செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை சரிசெய்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த கருப்பு எள் குடலியக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்க:

புற்றுநோய் வராமல் தடுக்க

கருப்பு எள் விதைகளில் பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் அதிகம் இருப்பதால் இது உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. மேலும் இந்த கருப்பு எள் புற்றுநோய் செல்களை அளிக்கும் தன்மையை கொண்டுள்ளது. அதனால் கருப்பு எள் அன்றாடம் சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.

சுவாச பிரச்சனைகளை தடுக்க:

சுவாச பிரச்சனைகளை தடுக்க

கருப்பு எள்  சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.  இதில் மக்னீசியம் அதிகளவில் காணப்படுவதால் கருப்பு எள்  சுவாச மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் இந்த கருப்பு எள்ளை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் நல்ல பயன் அளிக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

கருப்பு எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. கருப்பு எள்  கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுபடுத்த உதவுகிறது. இது இதய கோளாறுகள் வருவதை தடுக்கிறது. இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்