மூளை பாதிப்பு அறிகுறிகள் | Brain Tumor Symptoms in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் மூளையில் கட்டி இருந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம். பொதுவாக இது வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய் என்று அனைவரின் கூற்று அது தவறான கருத்து என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பீடுகிறார்கள். மூலையில் ஏற்படுவது சிறு வயது முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை மூளை கட்டி ஏற்படும். அவ்வாறு மூளையில் கட்டி இருந்தால் என்ன அறிகுறிகள் இருக்கும். என்பதை பற்றி இந்த பதிவு படித்து தெளிவாக தெரிந்துகொள்வோம்.
மூளை கட்டி அறிகுறிகள்:
- ஒரு மனிதனுக்கு உடம்பில் கட்டி ஏற்பட்டால் அது விரைவில் பெரிய மாற்றத்தை அளிக்காது.
- ஆனால் மூளையில் கட்டி ஏற்பட்டால் அதன் வளர்ச்சி உள்நோக்கி இருக்கும். ஆகவே அது வளரும் தொடர்ச்சியில் சில மாற்றத்தை உடலில் ஏற்படுத்தும் அதன் மூலம் நாம் அந்த அறிகுறிகளை கண்டுபிடித்துவிடலாம்.
மூளை காய்ச்சல் அறிகுறிகள் |
தலைவலி வருவதற்கான காரணங்கள்:
- ஒரு சிலருக்கு தொடர்ச்சியான தலைவலி ஏற்படும். சிலருக்கு ஒற்றை தலை வலி, சிலருக்கு தலை பாரம், நீர் கோர்த்தல் போன்று இல்லாமல் தினமும் தலை வலி ஏற்பட்டு வலி மிகவும் அதிகமாக இருந்தால் மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.
- நாம் தினமும் பேசும் போது இருக்கும் தெளிவு இருக்காது. பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். நேர்கொண்ட பார்வையில் பேசுபவர்கள் பேசுவதிலேயே தடுமாற்றத்தோடு பேச்சை பேசுவார்கள். எப்போதும் குழப்பத்திலேயே இருப்பார்கள். அவ்வாறு இருப்பது மூலையில் கட்டி இருப்பதற்கான அறிகுறியாகும்.
- மூலையில் கட்டி ஏற்பட்டால் பார்வை குறைவு ஏற்படும். கண்கள் மங்களாக தெரியும். கண்களில் வலி ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டால் மூளையில் கட்டி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
உடல் பலவீனம் அறிகுறிகள்:
- நல்ல உடல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சிறிது காலம் முடிந்த பிறகு அந்த சுறுசுறுப்பு இருக்காது. மூலையில் கட்டி ஏற்பட்டால் அது உடலில் உள்ள சத்துக்களை சுழற்சி செய்வதை நிறுத்தி உடல் பலவீனம் ஆக்கும். அதிகமாக சோம்பேறியாக இருப்பீர்கள் இதுவே மூலையில் கட்டி ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்..! |
கேட்கும் திறன் இழப்பு:
- மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது கண், காது தான். கண் காதுக்கு வரும் நரம்பு தான் முதலில் பாதிப்பு அடைந்து கடைசியில் கண் பாதிப்பையும், காது பாதிப்பையும் ஏற்படுத்தும்.
மனவளர்ச்சி குறைபாடு:
- மூளையில் உள்ள கட்டி மனிதனின் அடிப்படை வழக்கத்தை கூட மறக்கவைக்கும் அளவிற்கு பாதிக்கும். அன்றாட வாழ்வில் என்ன செய்வோம் என்பதை மறக்க வைக்கும். மனதில் எந்த விஷயத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. அதிக மறதி ஏற்படும். இதையெல்லாம் மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |