கத்திரிக்காயை இவர்கள் மறந்தும் கூட சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா..?

Advertisement

Brinjal Side Effects in Tamil

அனைவருடைய வீட்டிலும் தினமும் சமைக்கும் சாப்பிட்டில் ஏதோ ஒரு வகையில் கத்திரிக்காயை சேர்த்து கொள்கின்றனர். கத்திரிக்காய் சாம்பார், கத்திரிக்காய் புளிக்கொழம்பு, கத்திரிக்காய் வறுவல், கிரேவி மற்றும் தொக்கு இது போன்ற பல வகையான வகைகளில் கத்திரிக்காயை சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். நமக்கு அத்தகைய கத்திரிக்காயின் நன்மைகள் மற்றும் அதன் சுவை பற்றி மட்டுமே தெரிந்து இருக்கும். ஆனால் கத்திரிக்காயிலும் தீமைகள் இருக்கின்றன. இன்றைய பதிவில் கத்திரிக்காயின் தீமைகள் மற்றும் யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடலாம் மற்றும் சாப்பிடக்கூடாது என்பது பற்றியும் தெரிந்துகொண்டு பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா..?

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள்:

கத்திரிக்காய்

கத்திரிக்காயில் மொத்தம் 11 வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.

  1. வைட்டமின் A 
  2. வைட்டமின் B1
  3. வைட்டமின் B2
  4. வைட்டமின் C
  5. கால்சியம் 
  6. மாங்கனீசு 
  7. பொட்டாசியம்
  8. இரும்பு சத்து 
  9. நார்ச்சத்து 
  10. தாமிரம் 
  11. கலோரிகள் 

இத்தனை சத்துக்கள் நிறைந்த கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்…?

 

கத்தரிக்காய் தீமைகள்:

 

பெண்கள் மாதவிடாய்:

பெண்கள் மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு உள்ள பெண்கள் அதிக அளவு கத்திரிக்காய் சாப்பிட கூடாது. ஏனென்றால் அளவுக்கு அதிகமாக கத்திரிக்காய் சாப்பிடும் போது மாதவிடாயின் போது வரும் உதிர போக்கை அதிகரிக்க செய்யும்.

செரிமான கோளாறு:

செரிமான கோளாறு

நாம் அளவுக்கு அதிகமாக கத்திரிக்காய் சாப்பிடும் போது செரிமான கோளாறு, நெஞ்சு எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வரும்.

கருவுற்ற பெண்கள்:

கருவுற்ற பெண்கள்

 

கத்திரிக்காயில் கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு இயல்பாகவே இருக்கிறது. அதனால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனை படி சரியான அளவு மட்டுமே கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

வயிறு பிரச்சனை:

வாந்தி

கத்திரிகாயில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் போலிக் ஆசிட் இருப்பதால் இதனை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள கூடாது. எனவே இதனை அதிகமாக சாப்பிடும் போது மலச்சிக்கல், வாந்தி, வயிற்று போக்கு  மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது.

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரகபிரச்சனை

இதில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் கத்திரிக்காயை நாம் அதிக அளவு சாப்பிடும் போது சிறுநீரக பிரச்சனை மற்றும் சீறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் வரும்.

கத்திரிக்காய் சாப்பிட வேண்டியவர்கள்:

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள்
  • நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • மண்ணீரல் வீக்கம் உள்ளவர்கள்
  • ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள்
  • மூலநோய் உள்ளவர்கள்

கத்திரிக்காய் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் அதனை அளவோடு சாப்பிடாதீர்கள்.

கத்திரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

  • கருவுற்ற பெண்கள்
  • குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  • நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்பது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement