நாட்டு சர்க்கரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

Brown Sugar in Tamil

Brown Sugar in Tamil..! 

வணக்கம் அன்புள்ளம் கொண்ட நண்பர்களே.! இன்றைய ஆரோக்கியம் பதிவில் நாட்டு சர்க்கரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த நாட்டு சர்க்கரையில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 👉 உடலுக்கு பலமடங்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி பயன்கள்..!

 நாட்டு சர்க்கரையின் நன்மைகள்: 

நாட்டு சர்க்கரை

நாம் வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை குறைத்து கொண்டு நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது. வெள்ளை சர்க்கரையில் அதிகளவு கலோரிகள் காணப்படுகின்றன.

ஆனால் வெள்ளத்தில் இருந்து கிடைக்க கூடிய நாட்டு சர்க்கரையில் கலோரிகள் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நாட்டு சர்க்கரை உடலில் ஆற்றல் அதிகரிக்கும் சக்தியை கொண்டுள்ளது. நாட்டு சர்க்கரை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நாட்டு சர்க்கரை நமது உடலில் ஏற்படும் வெளிப்புற கிருமி தொற்றை தடுத்து எந்தவித நோயும் தாக்காமல் நம்மை பாதுகாக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இது உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது.

அதுபோல வளரும் குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரை உணவில் கலந்து கொடுத்தால்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்த: 

இரத்தத்தை சுத்தப்படுத்த

நாட்டு சர்க்கரை உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது. நாட்டு சர்க்கரையை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால்  ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்க:

இதய நோய்கள் வராமல் தடுக்க

இந்த நாட்டு சர்க்கரையை நாம் உணவில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். இது இதய கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

செரிமான பிரச்சனை வராமல் தடுக்க:

செரிமான பிரச்சனை வராமல் தடுக்க

நாட்டு சர்க்கரை செரிமான பிரச்சனைக்கு உடனடி தீர்வை தருகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளை சரி செய்கிறது. மேலும் இது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

நாட்டு சர்க்கரையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் இது பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு எதிராக போராடுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips