கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்!

Advertisement

கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்! Calcium Rich Foods for Pregnancy in Tamil

Calcium Rich Foods for Pregnancy in Tamil – கருவுற்ற பிறகு பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு உணவு உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும். இந்த கருவுற்ற காலத்தில் பெண்கள் தன வயிற்றில் இருக்கும் குழந்தையை சுமக்க எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். உங்கள் எலும்பு உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவு பட்டியல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

அத்திப்பழம்:Calcium Rich Foods for Pregnancy in Tamil

ஒமேகா 3, கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள உலர்ந்த அத்திப்பழத்தை ஒரு கப் அளவு சாப்பிட்டால் 241 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. ஆக கர்ப்பிணி பெண்கள் உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதினால் கால்சியம் சத்தை அதிகரிக்கலாம்.

பேரிச்சை:

11.36 மில்லி கிராம் கால்சியம் சத்து கொண்ட பேரிச்சையை கர்ப்ப கால வலி, இரத்தம் குறைதல், முதுகு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 மாத கர்ப்பிணிகள் சாப்பிட கூடாத உணவுகள்

உலர்ந்த ஆப்ரிகாட்:

இரும்பு சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ள உலர்ந்த ஆப்ரிகாட்டை கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம் சத்தை தருவதோடு குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது.

கிவி பழம்:

கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள கிவி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வர கர்ப்பகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.

மல்பெரி பழம்:

கால்சியம் சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மல்பெரி பழங்களை சாப்பிட்டு வர சிறந்த தீர்வாக இருக்கும் என கூறுகின்றன உளவியல் நிபுணர்கள்.

தண்ணீர்;

கர்ப்ப காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியமானதாகும். ஏனென்றால் நீர் குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் தொற்று போன்றவை இல்லாமல் இருக்கும்.

பாதாம்:

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணிகள் எந்த உணவு சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement