கம்பளி பூச்சி கடியின் எரிச்சலை குணப்படுத்தும் மருந்துகள் இதுதான்..!

Advertisement

கம்பளி பூச்சி கடி அரிப்பு மருந்து | Kambali Poochi Kadithal Enna Seiya Vendum

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நமது உடலில் பூச்சு கடியினால் ஏற்பட கூடிய எரிச்சலை குணப்படுத்துவது எப்படி என்று பார்க்கப்போகிறோம். கரப்பான் பூச்சி, பல்லி, வண்டு, எறும்பு இந்த வரிசையில் கம்பளி பூச்சி கடியினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுபடுவது எப்படி என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம் எரிச்சலில் இருந்து ஈசியாக விடுபடுவதன் வழிமுறைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..! கம்பளி பூச்சியின் உரோமம் நம்முடைய உடலில் படும்போது நம்மை அறியாமல் ஒரு விதமான எரிச்சல் ஏற்படுகிறது. எரிச்சல் ஏற்பட்ட இடத்தில் தடித்து மற்றும் சிவப்பாக இருக்கும் இதுவே கம்பளி பூச்சி கடியின் அறிகுறியாக காணப்படுகிறது.

உடல் அலர்ஜியை தடுக்க சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள் என்னென்ன தெரியுமா.!

கம்பளி பூச்சி கடி அரிப்பு மருந்து| கம்பளி பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும் .?

கம்பளிப்பூச்சி கடித்துவிட்டு என்றால் நம்முடைய உடலில் முதலில் பாதிக்கப்படுவது சர்மம்தான். உடலில் உண்டாகும் தடிப்பினை எளிதில் குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை  கொண்டு குணப்படுத்த முடியும். அது என்னென்ன  மருந்து பொருட்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விரிவாக பார்த்துதெரிந்துகொள்ளாம் வாங்க..!

  • இலவங்கம்
  • பப்பாளி
  • வெங்காயம்
  • கற்றாழை
  • பற்பசை 
  • துளசி இலை

இலவங்கம் மருத்துவ குணகங்கள்:

இலவங்கம் மருத்துவ குணங்கள்

இலவங்கம் பொதுவாகவே அழற்சி மற்றும் சருமத்தில் ஏற்படும் தடிப்பினை எதிர்க்கும் பண்பினை கொண்டது. கம்பளி பூச்சி கடியினால் ஏற்படும் தடிப்பு உள்ள இடத்தில் இலவங்கம் பட்டையின் பொடி எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து தடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் அந்த அலர்ஜி மறைந்துவிடும்.

பப்பாளியின் நன்மைகள்:

பப்பாளியின் நன்மைகள்

பப்பாளி பழம் பொதுவாக பல விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நோய்  எதிர்ப்பு தன்மையும் அதிகமாக உள்ளது. பப்பாளியை நன்றாக சீவிக்கொண்டு பூச்சி கடி உள்ள இடத்தில் பப்பாளியின் தோளினை ஒரு துணியில் வைத்து கட்டினால் சருமத்தில் ஏற்பட்ட தடிப்பு மாறிவிடும்.

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

சமையலுக்கு மட்டும் பயன்படக்கூடிய வெங்காயத்தில் மருத்துவ குணங்கள் நிறைய நிறைந்து இருக்கின்றன. இதில் புரதச்சத்தும் இருக்கின்றன. வெங்காயத்தை நரிக்கிகொண்டு நன்றாக பிசைந்து பாதிப்படைந்த இடத்தில் ஒரு துணியால் கட்டிவிடவேண்டும். அதன் பிறகு வலி மற்றும் அழற்சி மெதுவாக சரி ஆகிவிடும்.

கற்றாழையின் பயன்கள்:

கற்றாழையின் பயன்கள்

கற்றாழையில் இயற்கையாகவே  மருத்துவ பயன்கள் அதிகம் இருக்கிறது. கற்றாழை கிருமி நாசினியை போக்கும் தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு பாதிப்படைந்த இடத்தில் தடவினால் போதும் சரி ஆகிவிடும்.

பற்பசை எந்த தன்மை கொண்டது:

பற்பசை பல்துலக்க மட்டும் பயன்படுவதில்லை பூச்சி கடிகளுகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. பற்பசை எரிச்சல், காயம் போன்றவற்றை குணப்படுத்துகிறது. பற்பசை அதனுடன் சிறிதளவு சோடா சேர்த்து காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் நல்ல பயன் தரும்.

துளசி இலை மருத்துவம்:

துளசி இலை மருத்துவம்

துளசி இலைக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். சளி, இருமல், ஆஸ்துமா, ஜீரண கோளாறு, ஞாபக சக்தியின்மை இதற்கு எல்லாம் பயன்படுகிறது. நமக்கு தெரியாத ஒன்று எரிச்சலுக்கும் பயன் அளிக்கிறது. துளசி இலையினை தண்ணீருடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து பாதிப்படைந்த இடத்தில் தடவினால் போதும் விரைவில் நல்ல பயன்தரும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement