கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்

Advertisement

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த போக்கு 

கர்ப்பம் என்பது எந்த அளவுக்கு சந்தோசத்தை தருகின்றதோ அதே அளவுக்கு சோகத்தையும் தருகின்றது. கர்ப்ப  காலத்தில் ஆரம்ப கட்டங்களில் பல பெண்களுக்கு பிறப்புறுப்பில் இரத்த கசிவு ஏற்படுகிறது. இது சாதாரண விஷயமாக இருந்தாலும் அதே அளவுக்கு தொடர்ச்சியாக இருந்தால் கவனிப்பது மிகவும் அவசியம். இந்த  இரத்த போக்கின் போது  வலி, காய்ச்சல், தலைசுற்றல், வயிறு பிடுப்பு போன்ற பிரச்சனைகள் கூட ஏற்பட கூடும். அப்படி இருக்கும் பொழுது கர்ப்பகாலத்தில் இரத்த போக்கு ஏற்பட்டால் எந்த கர்ப்பணிக்கு தான் பயம் இல்லாமல் இருக்கும். இரத்த போக்கு ஏற்படும் பொழுது குழந்தை நல்லாத் தான் இருக்கின்றது என்று மகப்பேர் மருத்துவர் நம்பிக்கையாக சொன்னாலும் இந்த இரத்த போக்கு ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி மனசுக்குள்  யோசித்து  கொண்டிருப்போம்.

பிரசவத்திலோ அல்லது குழந்தை ஆரோக்கியத்திலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் கர்ப்பிணிக்கு ஏற்படும். அதிக இரத்த கசிவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இரத்த கசிவு ஏற்படும் போது  எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்   வாங்க….

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை 

முதல் மாதத்தில்  இரத்த போக்கு ஏற்பட்டால்:

கருத்தரித்த  10 முதல் 14  நாட்களுக்குள்  கருமுட்டை  கருப்பையின் உட்சுவரில் தன்னைப்  பதித்து கொள்ளும்.  அப்பொழுதுதான் சிலருக்கு பிறப்புறுப்பில்  லேசான இரத்த கசிவு ஏற்படுகிறது. இதை மாதவிடாய் என்று நினைத்து கொண்டு தாம் கர்ப்பம் அடைந்திருப்பதையே உணராமல் இருப்பவர்களும் உண்டு. இன்னும் சிலர் கருச்சிதைவு ஆகிவிட்டது எனப்  பதறிப்போவதும் உண்டு. கர்ப்ப காலத்தில் கருப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகம் இரத்தம் செல்லும். எனவே அந்த பகுதி இரத்தம் கோர்த்து கொண்டு சிவப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும். சிலருக்கு அந்த பகுதில் சிறுசிறு கீறல்கள் (Erosion Cervix) காணப்படும். அப்பொழுது தாம்பத்திய  உறவு வைத்து கொண்டாலும் அல்லது மருத்துவர் விரல் விட்டு பரிசோதனை செய்வதாலும் இந்த இரத்த கசிவு ஏற்பட  காரணமாகிறது. இது தானாகவே சரி ஆகிவிடும் எந்த ஒரு கவலையும் அடையாதீர்கள்.

இரண்டாம் மாதத்தில்  இரத்த போக்கு ஏற்பட்டால்:

கருப்பையின் வாய்பகுதில் சிறுநீர் கட்டிகள் ஏதேனும் இருந்தால் இரத்த போக்கு ஏற்படுகிறது. இன்னும்  சிலபேருக்கு கர்ப்பப்பையின் வாய் பகுதி இருக்கமாக  இல்லை என்றாலும் இரத்த போக்கு ஏற்பட  வாய்ப்பு உள்ளது. அப்போது வெள்ளைப்படுதலும் ஏற்படுகின்றது. கருப்பையின் வாய் பகுதி பலமில்லாமல் திறந்திருந்தால்  இரத்த கசிவு அதிகம் ஏற்படும்.

மூன்றாம் மாதத்தில்  இரத்த போக்கு ஏற்பட்டால்: 

மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த கசிவு ஆபத்தானது என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரத்த கசிவு மூன்றாவது மாதத்தில் இருக்கும் பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இக்காலகட்டத்தில் இரத்த போக்கு ஏற்பட முக்கியமான காரணம்  என்னவென்றால் நச்சுக்கொடி  விலகுவது மற்றொன்று நச்சிக்கொடி கீழ் இறங்குவது ஆகும். நச்சுக்கொடி கருப்பையின் சுவற்றிலிருந்து விலகிவிடுவதால் இரத்த போக்கு ஏற்பட காரணமாகிறது. இந்த  நச்சுக்கொடி பிரச்சனை 2 மாதம்  கர்ப்பிணி  பெண்களுக்கும் ஏற்படுகிறது.

முதல் மாதத்தில் கருச்சிதைவு அறிகுறிகள்:

முதல் மாதத்தில் இரத்த  கசிவு ஏற்பட்டால் அது கருச்சிதைவு காரணமாகவும் இருக்கலாம். 100 பேரில் ஒரு 25 பேருக்காவது இப்படி ஏற்படுகிறது. இவர்களில் பெரும்பாலும் 12 நாட்களில் ஏற்படுகின்றது. இது அவர்களின் அலட்சிய என்றும் சொல்லலாம். அப்பொழுது மருத்துவரிடம் சென்று வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan)  எடுத்துப்பார்ப்பது நல்லது. இந்த ஸ்கேன்  செய்வதால்  குழந்தையின் இதயத்துடிப்பை கேட்கிறதா  என்று பார்க்கலாம். குழந்தையின் இதய துடிப்பை கேட்ட பின்புதான் கருச்சிதைவா என்று கணிக்க வேண்டும். குழந்தையின் இதய துடிப்பு இல்லை என்றால்  கருச்சிதைவு ஆகிவிட்டது என்று அர்த்தம். இதய துடிப்பு இருந்தால் கர்ப்பத்தில் பிரச்சனை இல்லை. அப்போது இரத்த போக்கு காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

புற கர்ப்பம் அறிகுறிகள்: 

சில கர்ப்பிணி  பெண்களுக்கு கருமுட்டை கருப்பையில் பதியாமல் கருக்குழாயில் பதிந்து வளரத்  தொடங்கிவிடும். இதை புற கர்ப்பம் (Ectopic pregnancy) என்றும் சொல்வார்கள். இவ்வாறு கருக்குழாயில் பதிந்து வளரும் கருவானது அதிக நாட்கள் வளர முடியாது. அப்பொழுது அதிக இரத்த போக்கு ஏற்படும். அப்பொழுதுதான் அடிவயிறு சுருட்டி பிடித்தது போல் வலிக்கும், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். அப்பொழுது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அதற்கு உரிய சிகிச்சை எடுக்க வேண்டும்.

முத்துப்பிள்ளை  கர்ப்பம் அறிகுறிகள்: 

சிலருக்கு கர்ப்பமே அடைந்திருக்க மாட்டார்கள். மாறாக திராச்சை கொத்து போல் கருப்பையில் நீர்கட்டிகள் அடைந்திருக்கும். இதற்கு  முத்துப்பிள்ளை கர்ப்பம்  என்றும் பெயர். இதற்கான முக்கிய அறிகுறி மிகுந்த இரத்த போக்குதான். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின்  கர்ப்பப்பை சாதாரண கர்ப்பம் தரிக்கும் போது  ஏற்படும் விரிவாக்கத்தை விட அதிகமாக இருக்கும்  சினைப்பையின் இரண்டு பக்கங்களில் கட்டிகள் தோன்றலாம். இதை கொண்டு முத்துப்பிள்ளை இருப்பதை அறியலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்பது கருப்பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்று நோயாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால்  பயப்பிட தேவையில்லை.  கீமோதெரபி சிகிச்சை மூலம் 100 % குணப்படுத்திடலாம்.

கர்ப்பகாலத்தில் ஓய்வு எடுப்பதே சிகிச்சை: 

கர்ப்பகாலத்தில் ஓய்வு எடுப்பதே சிகிச்சை

கர்ப்பகாலத்தில் குறைந்த அளவு இரத்த கசிவு இருந்தால், வீட்டில் ஓய்வு எடுத்தாலே  நல்லது. அப்போது குறைவான வேலைகளை செய்யலாம். மிகவும் கடினமான வேலைகள் பார்க்க வேண்டாம்.  படிகளின் ஏறும்பொழுதும், இறங்கும்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதிகமாக இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறையில் இருந்து சாப்பிடும் முறை வரை  கவனம் மேற்கொள்ளவது மிகவும் அவசியம். கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை பிரச்சனை இருந்தாலும் தூக்கம் அவசியம். அதே முறையில் தூங்கும் முறையை மருத்துவர்களும், வீட்டில் உள்ளவர்களும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் இடது புறமாக  உறங்குவதன் மூலம்  சிறப்பான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. இடது பக்கம் படுக்கும் பொழுது இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்கிறது. இடது பக்கம் படுப்பதால் குழந்தைக்கு தேவையான இரத்தம் கிடைக்கும். குழந்தைக்கு ஊட்டச்சத்து அளவையும் அதிகரிக்க செய்யும். கர்ப்ப  காலத்தில் மல்லாந்து படுக்கும் பெண்களுக்கு சிரமமாக இருக்கும். இதனால் கர்ப்பப்பை இரத்த குழாய்களை அழுத்துவதால் மூச்சுதிணறல்  ஏற்பட்டு இரத்த ஓட்டம் குறையவும் வாய்ப்பு உள்ளது.ஆகையால் இடது புறம் தூங்குவது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement