உங்களின் பற்களில் உள்ள சொத்தை நீங்க இதை மட்டும் செய்து பாருங்க..!

Advertisement

Cavity Problem Solution in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள உணவு முறைகளினால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பற்களில் சொத்தைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் சொத்தையினால் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதனை போக்குவதற்காக நீங்களும் பல முயற்சிகளை செய்திருப்பீர்கள். ஆனால் அது முற்றிலும் குணமானதா என்றால் உங்களின் பதில் இல்லை என்று தான் இருக்கும். எனவே தான் இன்றைய பதிவில் பற்களில் உள்ள சொத்தைக்கு தீர்வாக அமையும் சில குறிப்புகளை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பற்களில் உள்ள சொத்தையினை எளிமையான முறையில் எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி போக்குவது என்று அறிந்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

How to Heal Cavities Naturally at Home in Tamil:

How to Heal Cavities Naturally at Home in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பூண்டு – 5 பற்கள் 
  2. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 
  3. உப்பு – 1 டீஸ்பூன் 
  4. தண்ணீர் – 1 டம்ளர்  

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை சூடுப்படுத்தி  கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  இந்த தண்ணீரை உங்களின் வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> பல்லில் உள்ள கறைகளை நீக்கி ஒரு நிமிடத்தில் பளிச்சென்று ஆக்கலாம்

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 5 பூண்டு பற்களின் தோலினை நீக்கி விட்டு அதனை உரலில் அல்லது ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடனே 1/4 டீஸ்பூன்  மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அரைத்த இந்த கலவையை ஒரு காட்டன் உருண்டையில் (Cotton Ball) மேல் வைத்து உங்களின் சொத்தை பல்லில் வைத்து நன்கு அழுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது உமிழ் நீர் அதிகமாக சுரக்கும் அதனை விழுங்கி விடாமல் வெளியில் துப்பி விடுங்கள்.

இதனை தினமும் வெறும் வயிற்றுடன் செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் பற்களில் உள்ள சொத்தை விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.

Cavity Problem Home Remedies in Tamil:

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கிராம்பு தூள் – 1 சிட்டிகை 
  2. நல்லெண்ணெய் – 1/4 டீஸ்பூன்   

இதையும் படித்துப்பாருங்கள்=> பல் ஈறு பலம் பெற

மேலே கூறியுள்ள பொருட்கள் இரண்டினையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து அதனை ஒரு காட்டன் உருண்டையில் (Cotton Ball) மேல் வைத்து உங்களின் சொத்தை பல்லில் வைத்து நன்கு அழுத்தி கொள்ளுங்கள்.

இப்பொழுது உமிழ் நீர் அதிகமாக சுரக்கும் அதனை விழுங்கி விடாமல் வெளியில் துப்பி விடுங்கள். இதனை தினமும் வெறும் வயிற்றுடன் செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் பற்களில் உள்ள சொத்தை விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement