சித்தகத்தி பூவில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா..?

Advertisement

Chithakathi Poo Benefits

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் சித்தகத்தி பூவில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்ததற்கு இதுபோன்ற மூலிகை செடிகள் தான் காரணம்.

ஆனால் இன்று நம் உடம்புக்கு சிறிய பிரச்சனை என்றாலும் உடனே நாம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் ஆந்த காலத்தில் உடல்நிலை சரியில்லை என்றால் மூலிகை செடிகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி விடுவார்கள். அந்த வகையில் சித்தகத்தி பூவில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஆவாரம் பூ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள்:

சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள்

மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான் சிறுமரம் தான் சித்தகத்தி. இந்த மரம் மஞ்சள் பயிறுக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பட்டு வருகிறது. மென்மையான தன்மையை உடைய இந்த மரம் விரைவாக வளரக்கூடியது.

இந்த பூக்கள் வயல்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூக்கள் சிற்றகத்தி மற்றும் கருஞ்செம்பை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சாலை ஓரங்களில் காணப்படும் இந்த சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள் ஏராளம். அது என்ன என்று இங்கு பார்ப்போம்.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள் 

தலைவலி குணமாக:

இந்த சித்தகத்தி பூக்களை நல்லெண்ணெயுடன் காய்ச்சி பின் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து கொள்ளவும். பின் இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி, கழுத்து நரம்பு வலி மூக்கில் நீர்வடிதல், சீதளம், தலைபாரம், ஆஸ்துமா மற்றும் தலையில் நீர்கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

புண்கள் குணமாக:

இந்த பூவுடன் அதன் இலைகளையும் அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் அது குணமாகும். மேலும் இதை அரைத்து தோளில் தடவி வந்தால் தோளில் ஏற்படும் படை, சொறி, அரிப்பு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

அதுமட்டுமில்லாமல் இது கீல்வாத வலி, காயங்கள், வீக்கம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

👉 குப்பைமேனி பலவித பிரச்னைகளுக்கு இயற்கை தந்த வரம் 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement