தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

Cinnamon Tea Benefits in Tamil

இலவங்கப்பட்டை நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடியது. இது ஒரு வாசனை மசாலா பொருள் ஆகும். இதனை அதிகமாக அசைவ உணவுகளில் சேர்ப்பார்கள். அவற்றின் சுவையும் மனமும் நன்றாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதனை பயன்படுத்தி டீயும் போடுவார்கள். பொதுவாக நாம் அனைவருக்குமே டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி நாம் குடிக்கும் டீயில் ஆரோக்கியமான பொருட்களை சேர்த்து குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். எனவே அந்த வகையில் நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய இலவங்கப்பட்டை டீயின் நன்மைகளை பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும், உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும்  ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் அளவிற்கு உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது:

 இலவங்கப்பட்டை டீ பயன்கள்

இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. பொதுவாக இதயநோய் வருவதற்கு முக்கிய காரணம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதே. எனவே உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சரியான அளவில் வைத்து கொள்ள இலவங்கப்பட்டை உதவுகிறது.

மாதவிடாய் வலியை போக்குகிறது:

 cinnamon tea benefits in tamil

இலவங்கைப்பட்டை டீ குடிப்பதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வாந்தி, வயிற்று வலி, குமட்டல் மற்றும் இரத்தப்போக்கு போன்றவற்றை குறைக்கிறது.

எடையை குறைக்க உதவுகிறது:

 benefits of cinnamon tea for weight loss in tamil

இலவங்கப்பட்டை டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் இதனை அதிகமாக உட்கொள்ளுதல் கூடாது. ஏனென்றால், இதில் அதிக அளவில் கூமரின் உள்ளது. இது கல்லீரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே இதனை அளவோடு உட்கொள்ளுதல் சிறந்தது.

டீ-க்கு வேறு பெயர்கள் என்ன தெரியுமா..? | தேநீர் வேறு சொல்..?

சருமத்திற்கு நல்லது:

 cinnamon tea benefits for skin in tamil

இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் சருமம் பளப்பளப்பாக இருக்கிறது. ஏனென்றால் இது சருமத்தில் உள்ள கொலாஜன் உருவாக்கத்தை தூண்டி சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் முகம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேலும் இது சருமத்தில் முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

நீரிழிவு நோய்க்கு மருந்து:

இலவங்கைப்பட்டை டீ அருந்துவதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. மேலும் இது, உடலில் குளுக்கோஸ் உட்கொள்ளும் அளவையும் குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்க்கிறது:

இலவங்கப்பட்டை டீ அருந்துவதன் மூலம் உடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. அதாவது, தொற்றுக்களை அளிப்பதில் ஒரு சிறந்த மூலப்பொருளாக திகழ்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்