Cinnamon Multi Purpose in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி இருக்கும். அதாவது நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான பொருட்களை பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் பல பொருட்களின் ஒரே ஒரு பயன்பாடு மட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதனை நம்மால் பல வகையில் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் அது நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பல்வேறு பயன்பாட்டை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் இலவங்கப்பட்டையின் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். இலவங்க பட்டையில் அப்படி என்ன பல வகையான பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
இலவங்க பட்டையின் பல்வேறு பயன்கள்:
சமையலில் இலவங்க பட்டை:
பொதுவாக இலவங்க பட்டை என்றவுடன் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு தான். ஆம் நண்பர்கள் இந்திய பாரம்பரிய உணவுகள் முதல் மேலை நாட்டு உணவுகளிலும் இது ஒரு முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தபடுகிறது.
அதாவது நாம் தயாரிக்கும் பல வகையான கார உணவுகளில் ஒரு முக்கியமான மசாலா பொருளாக இந்த இலவங்கப்பட்டையை பயன்படுத்துவோம்.
ஆரோக்கியத்தில் இலவங்கப்பட்டை:
இலவங்க பட்டையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு காணலாம். இலவங்கப்பட்டையில் பலவகையான முக்கிய சத்துக்கள் உள்ளது.
மேலும் இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த ஆக்சிஜனேற்றங்கள் உடலுக்கு ஏற்படும் பல வகையான சேதங்களை தடுக்க உதவுகிறது.
மேலும் மூளை செல்கள் சேதமடையாமல் இருக்க இந்த இலவங்கப்பட்டை பயன்படுகிறது. அதே போல் பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கவும் சுவாசப் புத்துணர்ச்சிக்கும் பட்டை பயன்படுகிறது.
நீரிழிவு நோய் இருப்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாமல் நீரில் பட்டையை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம். அதே போல் இந்த இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதனால் உங்கள் உடல் எடையையும் குறைக்க முடியும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ நெய்யை ருசித்து சாப்பிட்டால் மட்டும் போதாது இதுவும் தெரிஞ்சிருக்கனும்
அழகை மேம்படுத்துவதில் இலவங்க பட்டை:
இலவங்கப்பட்டை சருமத்தின் அழகை மேம்படுத்த மிகவும் பயன்படுகிறது. அதே போல் இந்த இலவங்கப்பட்டையில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் முகத்தில் உள்ள பருக்களை போக்க பயன்படுகிறது.
அதாவது இலவங்கப்பட்டை பொடி மற்றும் துளசி பொடி இரண்டையும் சம அளவு எடுத்து அதனை தேனுடன் கலந்து உங்கள் முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து விடும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |