உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

banana tree multi purpose in tamil

Multi Purpose in Tamil

ஒரு நாளைக்கு நாம் நிறைய வகையான பொருட்களை பயன்படுத்துகின்றோம். மறுநாள் நாள் காலையில் நாம் அதே பொருளை பயன்படுத்துவோம் என்றால் அது கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் அன்றைய நாளில் நமக்கான தேவை வேறு எதாவதாக இருந்தால் நாம் அதனை மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் இதுமாதிரி இல்லாமல் ஒரே ஒரு பொருள் மட்டும் நிறைய வகையான பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. இதுநாள் வரையிலும் இதனை பற்றி எல்லாம் அதிகமாக கேள்விபட்டது இல்லை. நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருளில் கூட நிறைய வகையான பயன்பாடு இருக்கும். இதனை தான் Multi Purpose என்று கூறுகின்றோம். அந்த வகையில் இன்று Banana Tree Multi Purpose பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Banana Tree Multi Purpose in Tamil:

ஒரு மரம் என்றால் அதில் பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள் என நிறைய வகையான முறைகள் உள்ளது.

இத்தகைய அடிப்படையில் தினமும் நாம் வாழைக்காய் மற்றும் வாழைப்பழம் பார்த்து இருப்போம். அப்படி இல்லை என்றால் வீட்டில் அதனை சாப்பிட்டு இருப்போம். இவை இரண்டும் ஒரே வாழை மரத்தில் இருந்து தான் வருகிறது.

இதுமட்டும் இல்லாமல் நமக்கு தெரிந்த வாழை மரம் வேறு என்ன மாதிரியான தேவைக்காக பயன்படுகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ பனைமரம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

வாழைப்பூ:

வாழைப்பூ

வாழைமரத்தில் இருந்து கிடைக்கூடிய வாழைப்பூவானது நிறைய வகையான சத்துக்களை கொண்டுள்ளது. வாழைப்பூ நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்தல், உடலில் ஏற்படும் பதட்டத்தை கட்டுபடுத்துதல், சிறுநீரக செயல்பாட்டை சரிசெய்தல் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல் என நிறைய வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

வாழைக்காய்:

வாழைக்காய்

வாழைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வாழைக்காயானது அதிகமாக சாப்பாட்டில் எல்லோரும் விரும்பும் ஒன்றாக உள்ளது. இத்தகைய வாழைப்பழத்தில் மெக்னீசியம், நார்ச்சத்துள்ளது.

இந்த வாழைக்காய் உடலில் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை சரி செய்யவும் நன்மையினை அளிக்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

வாழையிலை:

வாழையிலை

நிறைய வகையான செடி, கொடி மற்றும் மரங்களில் இலைகள் இருந்தாலும் கூட அந்த இலைகள் அனைத்தும் பயன்படுவது இல்லை. ஆனால் வாழை இலையானது நாம் உணவு சாப்பிடுவதற்கு என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாழை இலையில் மெழுகு தன்மை உள்ளது. அதனால் இதில் நாம் சாப்பாடு சாப்பிடும் போது அந்த இலையில் இல்ல மெழுகு நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் சாப்பாட்டின் சுவையினை அதிகரிக்கவும் செய்கிறது. 

உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..! அப்போ அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

வாழைத்தண்டு:

வாழைத்தண்டு

வாழைத்தண்டில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழை தண்டினை நாம் சாப்பிடும் போது சிறுநீர் நிறைய கழிக்கவும், குடலில் கல் இருந்தால் அதனை கரைய செய்யவும் மற்றும் இதயத்தின் தசையினை வலுப்பெற செய்யவும் பயன்படுகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழம்

பழங்களில் சிறந்த பழமாக கருதுவது வாழைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வாழைப்பழத்தை தான். இத்தகைய வாழைப்பழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸைடு ஆகிய சத்து உள்ளது.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களை நம்முடைய உடல் எடையை குறைக்கவும் மற்றும் மலச்சிக்கலை சரி செய்யவும் உதவுகிறது. அதுபோல வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இதனை நிறைய செடி, கொடிகளுக்கு கரைசலாகவும் செய்து உரமாக அளிக்கிறார்கள்.

நம்முடைய வீட்டில் உள்ள ஒரே ஒரு வாழைமரமானது நமக்கு 5 விதமான முறையில் பயன்பட்டு அதன் மூலம் உடலுக்கு ஏதோ ஒரு வகையான நன்மையினை அளிக்கிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com