காலிஃப்ளவரின் பல்வேறு பயன்படுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Multipurpose of Cauliflower in Tamil

பொதுவாக நம் பயன்படுத்தும் அனைத்தும் பொருட்களுமே நமக்கு பலவகைகளில் பயன்படுகிறது. ஆனால் அவற்றை பற்றி நாம் அறிந்து கொள்வதில்லை. ஒரு பொருளை நாம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்.? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் ஒவ்வொரு பொருட்களின் பல்வேறு பயன்பாடுகளை பதிவிட்டு வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவில் காலிஃப்ளவர் நமக்கு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பின்வருமாறு விவிரித்துள்ளோம்.

காலிஃப்ளவரின் பல்வேறு பயன்படுகள்:

 uses of cauliflower in tamil

காலிஃப்ளவரில் உள்ள சத்துக்கள்:

காலிஃப்ளவரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் சி- யும் மெக்னீசியமும் அதிக அளவில் உள்ளது. இதில் கொழுப்பு சத்து குறைவு என்பதால் இதனை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளலாம். காலிஃப்ளவரில், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

காலிஃப்ளவர் எதற்கெல்லாம் பயன்படுகிறது:

சமையலில் காலிஃப்ளவர்:

காலிஃப்ளவர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. காலிஃப்ளவரை பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். அதுமட்டுமின்றி இது சுவை நிறைந்த உணவு பொருளாகவும் கருதப்படுகிறது.

புற்றுநோய்க்கு மருந்து:

காலிஃப்ளவரில் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்றவை உள்ளது. எனவே, புற்றுநோய் இருப்பவர்களுக்கு காலிஃப்ளவரில் உணவு செய்து கொடுப்பதன் மூலம் புற்றுநோய் விரைவில் குணமடையும். அதிலும், குறிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு காலிஃப்ளவர் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

கேரட்டை சாப்பிடுவதற்கு முன்னால் இதை தெரிஞ்சுக்கோங்க

உடல் எடையை குறைய காலிஃப்ளவர் சூப்:

உடல் எடை அதிகமாக உள்ள நபர்களுக்கு காலிஃப்ளவர் சூப் சிறந்த பலன்களை அளிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலிஃப்ளவர் சூப் செய்து சாப்பிடலாம்.

முடி வளர்ச்சிக்கு காலிஃப்ளவர்:

முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கும் தலைமுடி உதிராமல் இருப்பதற்கும் காலிஃப்ளவர் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.

முகம் பளபளப்பாக காலிஃப்ளவர்:

காலிஃபிளவரில் ஏராளமான வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. காலிஃப்ளவர் சாப்பிடுவதால் சருமம் அரோக்கியமாக இருப்பதுடன் முதுமை தோற்றத்தியும் குறைக்கிறது.

இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலே உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து கொண்டு இருந்திருக்கோமே..!

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose
Advertisement