Beetroot Multi Purpose
அதிகமாக ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்றாக உள்ளது. இத்தகைய பீட்ரூட்டினை பிடிக்கும் என்று சொல்பவர்களை விட பிடிக்காது என்று சொல்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். இவ்வாறு பீட்ரூட் சாப்பிட மறுபவர்களை ஒவ்வொரு முறையும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை சொல்லி தான் சாப்பிட வைப்போம். இதன் படி பார்க்கும் போது பீட்ரூட்டை பற்றி நமக்கு தெரிந்த ஒன்று என்றால் அதில் அதிகமாக சத்துக்கள் உள்ளது. அதனால் பீட்ரூட் உடலுக்கு நல்லது. ஆனால் எந்த பொருளாக இருந்தாலும் அதனை பற்றிய முழு திறன்களையும் தெரிந்துக்கொள்வது நல்லது. இத்தகைய முறையினை தான் ஆங்கிலத்தில் Multi Purpose என்ற கூறுவார்கள். அதனால் இன்று பீட்ரூட்டின் பல்நோக்கு திறன் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்..!
ஆப்பிளில் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது..
பீட்ரூட் பற்றிய தகவல்:
பீட்ரூட் என்பது நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய ஒரு காய் ஆகும். இந்த காய் ஆனது நாவல்பழம் நிறம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இத்தகைய பீட்ரூட் ஆனது ஐரோப்பியாவில் தான் அதிகமாக உண்ணப்பட்டு வருகிறது. மேலும் பீட்ரூட்டில் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B3, வைட்டமின் B6, கால்சியம், பொட்டாசியம், சோடியம், சல்பர், நார்ச்சத்து மற்றும் காப்பர் என பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
பீட்ரூட் நன்மைகள்:
- அன்றாட வாழ்க்கையில் நாம் பீட்ரூட் சேர்த்து கொள்வதனால் நம்முடைய உடல் ஆனது வலிமை பெற்று அதிகமான ஆற்றலுடன் இருக்க உதவுகிறது.
- அதேபோல் பீட்ரூட்டில் உள்ள ஊட்டசத்துக்கள் ஞாயபக சக்தியினை அதிகரிப்பதற்கு சிறந்த ஒன்றாக உள்ளது. அதனால் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது.
- பீட்ரூட்டில் கால்சியம் சத்து இருப்பதால் இதனை நாம் உணவுடன் சேர்த்து கொள்வதன் மூலம் பெண்களுக்கு இருக்கும் கால்சியம் பற்றாக்குறை சரி ஆகிறது. மேலும் எலும்புகளும் வலிமையுடன் இருக்கவும் செய்கிறது.
- நார்ச்சத்து பீட்ரூட்டில் இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியினை அதிகரிக்க செய்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வருவதையும் தடுக்கிறது.
பீட்ரூட் சாறு:
நாம் தினமும் குடிக்கும் ஆப்பிள் ஜூஸ், மாதுளை ஜூஸ், கேரட் ஜூஸ் இதுபோன்ற ஜூஸ் வகைகளில் பீட்ரூட் ஜூஸும் ஒன்றாக உள்ளது. பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் போலவே இதனை நாம் ஜூஸாக குடிப்பதன் மூலமாகவும் பெறலாம்.
- பீட்ரூட் சாறு தினமும் 1 கிளாஸ் குடிப்பதன் மூலம் அதில் உள்ள B1 மற்றும் இரும்புசத்து நமது உடலின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்க செய்யலாம். ஆகவே இரத்த இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளவர்கள் தாராளமாக இதை குடிக்கலாம்.
- இதய கோளாறு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இதயத்தினை வலிமை பெற செய்யலாம்.
- இத்தகைய ஜூஸினை குடிப்பதன் மூலம் கல்லீரலில் பாதிக்கப்பட்ட செல்களை மீண்டும் புத்துணர்ச்சியுடன் புதுப்பிக்க உதவுகிறது.
- மேலும் பீட்ரூட் ஜூஸினை நாம் குடித்துவருவதன் மூலம் கெட்ட கழிவுகளை வெளியேற்றுவதோடு மட்டும் இல்லாமல் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் செல்களை அழிக்கவும் செய்கிறது.
சமையலில் வெண்டைக்காய் சேர்ப்பதற்கு முன்பாக அதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் |
முகத்திற்கு பீட்ரூட்:
பீட்ரூட்டில் இயற்கையாகவே ஆக்சிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இதனை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கருவளையம் மற்றும் முகச்சுருக்கங்கள் மறைகிறது.
அதுமட்டும் இல்லாமல் முகத்தின் வெண்மை நிறத்தினை அதிகரிக்க செய்கிறது.
சமையலில் பீட்ரூட்:
- பீட்ரூட் வடை
- பீட்ரூட் பொரியல்
- ஜூஸ்
- வறுவல்
- கூட்டு
- அல்வா
- பாயாசம்
சமையலிலும் பீட்ரூட் வெவ்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |