Ladies Finger Multi Purpose
பொதுவாக நாம் அதிகமாக வெண்டைக்காய் சாப்பிடுபவர்களை இவர்கள் அதிபுத்திசாலியாம் என்று கேலி செய்து பேசுவோம். ஆனால் இவ்வாறு நாம் கேலி செய்வதற்கு முன்பாக வெண்டைக்காய் பற்றி நமக்கு எல்லா விஷயமும் தெரியுமா என்று கேட்டால்..? அதற்கு எந்த விதமான பதில்களும் நம்மிடம் கிடையாது. இவ்வாறு நாம் பார்க்கும் பட்சத்தில் எந்த ஒரு பொருளை பற்றியும் நாம் ஆழ்ந்த சிந்தனை அல்லது தகவலை சேகரிக்கும் போதும் அதனுடைய பல்நோக்கு திறன் என்ன என்பதை கட்டாயமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பொருளுமே நமக்கு தெரியாத பல வகையான பல்நோக்கு திறன்களை கொண்டதாக தான் கருதப்படுகிறது. ஆகவே இன்று வெண்டைக்காயின் பல்நோக்கு திறன் பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே..!
ஆப்பிளில் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது..
வெண்டைக்காய் பற்றிய தகவல்:
அன்றாடம் நம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகளில் அதிகமாக வழுவழுப்பு கொண்ட ஒரு காய் வெண்டைக்காய் தான். இத்தகைய வெண்டைக்காயினை வெண்டை அல்லது வெண்டி என்ற இதர பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
இந்த வெண்டைக்காய் பெரும்பாலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் சமையலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வெவ்வேறு நிறங்களில் காணப்படுகிறது.
மேலும் வெண்டைக்காய் 2 மீட்டர் வரை உயரமாகவும், 10 மீ முதல் 20 மீ வரை நீளமாகவும் வளரக்கூடியது. அதேபோல் இதனுடைய பூக்கள் ஆனது மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் உள்ளது. வெண்டையின் பூக்கள் 4 செ.மீ முதல் 8 செ.மீ வரை காணப்படுகிறது.
வெண்டைக்காய் பார்ப்பதற்கு பெண்களின் விரல் போல் மிகவும் ஒல்லியாக இருப்பதால் இதற்கு ஆங்கிலப்பெயராக Ladies Finger என்று அழைக்கப்படுகிறது.
வெண்டைக்காயின் சத்துக்கள்:
- வைட்டமின் A
- வைட்டமின் C
- வைட்டமின் E
- வைட்டமின் K
- கால்சியம்
- மெக்னீசியம்
- கார்போஹைட்ரேட்
- புரதச்சத்து
- கலோரிகள்
- பொட்டாசியம்
- போலிக் அமிலம்
- சுண்ணாம்புச்சத்து
மேலே கூறியுள்ள சத்துக்கள் இல்லாமல் பிற எண்ணிலடங்காத சத்துக்கள் வெண்டையில் உள்ளது.
வெண்டைக்காய் பயன்கள்:
- நாம் வெண்டை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய மூளையின் நினைவு ஆற்றல் அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் ஞாயபக சக்தியினையும் அதிகரிக்க செய்கிறது.
- இத்தகைய வெண்டைக்காயில் போலிக் அமிலம் இருப்பதால் இதனை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- மேலும் இதனை நாம் தினமும் ஏதோ ஒரு வகையில் உணவுடன் சரியான அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் தேவையில்லதா கொழுப்புகளை சேர விடாமல் உடல் எடையினை குறைக்க செய்கிறது.
- அதேபோல் இதில் கால்சியம் சத்து இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான நிலையில் இருக்க உதவுகிறது. மேலும் எலும்புகள் பலம் பெறவும் உதவுகிறது.
வெண்டைக்காய் தண்ணீர் பயன்கள்:
- வெண்டைக்காயினை ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவும்.
- அன்றாடம் நாம் ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீரை பருகுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வருகிறது. மேலும் இதய நோய்கள் எதுவும் வராமலும் இருக்க உதவுகிறது.
- இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆனது குடலை சுத்தம் செய்து குடல் புற்றுநோய் வருவதை தடுக்க சிறந்த ஒரு காரணியாக உள்ளது.
தலைமுடிக்கு வெண்டைக்காய்:
நம்மில் நிறைய நபர்கள் வெண்டைக்காயினை அரைத்தோ அல்லது அதனையுடைய தண்ணீரையோ முடிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு நாம் பயன்படுத்துவதன் மூலம் முடி நன்றாக நீளமாகவும், முடி உதிர்வு இல்லாமல் இருக்கும்.
சமையலில் வெண்டைக்காய்:
சமையலை பொறுத்தவரை வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் பொரியல், வறுவல், கிரேவி மற்றும் வெண்டைக்காய் மோர் குழம்பு என ஒவ்வொருவரும் பிடித்த மாதிரி சமைத்து சாப்பிடுகிறார்கள்.
மூங்கிலின் பல்நோக்கு திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |