Apple Fruit in Tamil
நாம் எதை பற்றி தெரிந்து கொள்கிறமோ இல்லையோ சாப்பிடும் உணவு பொருட்களில் உள்ள விஷயங்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஆனால் நாம் சாப்பிடும் போது இந்த உணவை இப்படி செய்திருந்தால் நல்ல இருந்துருக்கும், டேஸ்ட் கம்மியா இருக்கு என்றெல்லாம் தான் சொல்லியிருப்போம். உணவு பொருளை சாப்பிடுவதற்கு முன் அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆப்பிள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதனால் ஆப்பிளில் உங்களுக்கு தெரியாத விஷயங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
ஆப்பிள் பயன்கள்:
ஆப்பிளில் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனால் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் குடலில் இருக்க கூடிய கிருமிகளை அழிப்பதற்கு உதவுகிறது.
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையிலிருந்து தடுக்கிறது.
ஆப்பிளில் உள்ள தோள்களில் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் ஆனது புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகிறது. முக்கியமாக மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கு உதவுகிறது.
உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து இதய பிரச்சனை வராமல் தடுப்பதற்க்கு உதவுகிறது. இதய பிரச்சனை வராமல் தடுப்பதற்க்கு தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதுமானது.
ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே.
சருமத்திற்கு ஆப்பிள் எப்படி உதவுகிறது:
ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தை புத்துணர்ச்சி ஆக்க உதவுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.
சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
பருக்களை தடுக்கவும், தோல் சுருக்கம் ஏற்படாமலும், சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு ஆப்பிள் பயன்படுகிறது.
இதற்கு நீங்கள் ஒரு துண்டு ஆப்பிளை நறுக்கி முகத்தில் மசாஜ் செய்து வர வேண்டும்.
சமையலுக்கு ஆப்பிள்:
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் மில்க் ஷேக்
ஆப்பிள் கேசரி
மூங்கிலின் பல்நோக்கு திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |