வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே..!

Updated On: June 27, 2023 6:38 AM
Follow Us:
Fenugreek Multi Purpose in Tamil
---Advertisement---
Advertisement

Fenugreek Multi Purpose in Tamil

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் நாம் ஒரே ஒரு முறையில் தான் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் பலவகையில் நம்மால் பயன்படுத்த முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. எனவே தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொருளின் பலவகையான பயன்பாடுகளை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்து ஒரு பொருளான வெந்தயத்தின் பல்வேறு பயன்பாடுகளை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். வெந்தயத்தால் நமக்கு என்ன பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்கள் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்குமான தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

வெந்தயத்தின் பல்வேறு பயன்பாடுகள்:

Vendhayam benefits in tamil

சமையலில் வெந்தயம்:

பொதுவாக வெந்தயம் என்ற வார்த்தையை கேட்டவுடன் நாம் அனைவரின் மனதிற்கும் நினைவிற்கு வருவது அதனின் சமையல் பயன்பாடு தான். ஏனென்றால் இந்த வெந்தயம் நமது இந்திய பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

அதாவது இதனை விதைகள் மட்டுமில்லாமல் இதன் இலைகளையும் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். அதாவது இதன் இலைகளை பயன்படுத்தி கூட்டு, பொரியல் மற்றும் குழம்பு ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த வெந்தய இலையை நன்கு காயவைத்து அதனை நன்கு பொடியாக செய்து வைத்து கொண்டு உணவுகளில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் விதைகளை பலவகையான உணவுகளில் ஒரு முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

முட்டை முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதுன்னு தெரியும் ஆனால் இந்த விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க

ஆரோக்கியத்தில் வெந்தயம்:

நமது முன்னோர்கள் உணவில் வெந்தயத்தை பயன்படுத்தியதற்கான முக்கிய காரணமே இதன் மருத்துவ குணங்கள் தான். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான அளவில் நிறைந்துள்ளது.

வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் நமது உடலுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.

மேலும் வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.

இதனால் நமது உடல் மிகவும் வலிமை பெறுகிறது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை குறைக்கும்.

அழகை மேம்படுத்துவதில் வெந்தயம்:

Benefits of fenugreek in tamil

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி குளித்தால் நமது தலைமுடி நன்கு வலுப்பெறும், முடிஉதிர்வு குறையும் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல் வெந்தயத்தை அரைத்து நமது முகத்தில் தடவி கழுவினால் நமது முகத்தில் எண்ணெய் வடிதல் குறையும்.

மேலும் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு தெளிவு பெரும். ஊறவைத்த வெந்தயத்தை அறைத்து அதோடு தயிர் சேர்த்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

multipurpose of ponnanganni keerai in tamil

நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களா..! அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

 Multi Purpose of Pirandai in Tamil

உங்க வீட்ல பிரண்டை செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!

multipurpose of poovarasu maram

உங்க வீட்ல பூவரச மரம் இருக்கா.! அப்போ இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

Coconut Tree in Tamil

வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயமும் தெரிந்திருக்கணும்..!

Multi Purpose of Pomegranate in Tamil

மாதுளை பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது.. இதையும் தெரிச்சிருக்கணும்..!

banana tree multi purpose in tamil

உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

Eggs Multipurpose in Tamil

முட்டை முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதுன்னு தெரியும்.. ஆனால் இந்த விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க..!

Multipurpose of Cauliflower in Tamil

காலிஃப்ளவரின் பல்வேறு பயன்படுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.?