இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலே உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து கொண்டு இருந்திருக்கோமே..!

Advertisement

Multipurpose of Potato in Tamil

பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு பயன் தான் உள்ளது என்று நாம் நினைத்து கொண்டிருப்போம். அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு பயன் தான் உள்ளது என்றால் அது உண்மை இல்லை. ஏனென்றால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பலவகையான பயன்கள் உள்ளது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொருளின் பல்வேறு பயன்களை அல்லது பன்னோக்கு திறனை அறிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல் இன்றைய பதிவில் நாம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உருளைக்கிழங்கின் பல்வேறு பயன்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். இப்பொழுது உங்களின் மனதில் ஒரு கேள்வி எழும் அது என்னவென்றால் உருளைக்கிழங்கில் அப்படி என்ன பல்வேறு பயன்கள் உள்ளது. இந்த பதிவை முழுதாக படித்தீர்கள் என்றால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

முந்திரியை உணவில் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

உருளைக்கிழங்கின் பல்வேறு பயன்கள்:

Potato Benefits in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். அப்படி அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உருளைக்கிழங்கின் பல்வேறு பயன்கள் அல்லது பல்நோக்கு திறனை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

உணவில் உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு என்ற உடனே நாம் அனைவருக்கும் அதனின் சமையல் பயன்பாடு தான் முதலில் நினைவிற்கு வரும். அதாவது உருளைக்கிழங்கு நமது இந்திய உணவுகள் முதல் மேலை நாட்டு உணவுகள் என அனைத்திலும் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு காய் ஆகும்.

இதனை பயன்படுத்தி சாம்பார், புளிக்குழம்பு, பொரியல் மற்றும் வறுவல் போன்ற பலவகையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

மாதுளை பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிச்சிருக்கணும்

ஆரோக்கியத்தில் உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கின் சாறு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள் மற்றும் இரைப்பைக் கோளாறுகள் போன்ற கோளாறுகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

மேலும் இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு காரர்களும் இதனை சரியான அளவில் உட்கொண்டால் நல்லது.

உருளைக் கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது. அதனால் உருளையை தோலுடன் உண்பதனால் நமது உடலின் நார்சத்து அதிகரிக்கும்.

அழகினை மேப்படுத்துவதில் உருளைக்கிழங்கு:

Potato Health Benefits in Tamil

வேகவைக்காத உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இதனுடை சாற்றினை முகத்தில் தடவி வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

அதேபோல் உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகின்றது.

மேலும் இதனை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும்.

இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose
Advertisement