Multipurpose of Cashew Nuts in Tamil
நம்மில் ஒரு சிலர் அதிக அளவு முந்திரியை சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுபவர்களை பார்த்து மற்றவர்கள் நீ தினமும் முத்திரையை சாப்பிட்டு நன்கு குண்டாக ஆகப்போகிறாய் என்று கூறி கிண்டலும் கேலியும் செய்வார்கள். அப்படி கிண்டலும் கேலியும் செய்பவர்களிடம் முந்திரி பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு தெரியுமா..? அவர்களிடம் பதிலே இருக்காது. எனவே தான் ஒரு பொருளை பற்றி அவதூறாக பேசுவதற்கு முன்னால் அதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அதனின் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் பல்நோக்கு திறன் ஆகியவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் முந்திரி பருப்பின் பல்வேறு பயன்பாடுகளை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
மாதுளை பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிச்சிருக்கணும்
முந்திரி பருப்பின் பல்நோக்கு திறன்:
பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய பலவகையான பருப்புகளில் இந்த முந்திரி பருப்பும் ஒன்று ஆகும். ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்த முந்திரி நமது உடல்நலத்திற்கு மிகுந்த தீங்கினை விளைவிக்கும் என்ற தவறான புரிதலுடன் இருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரும் இந்த பதிவை முழுதாக படித்தால் முந்திரி பருப்பின் பல்வேறு பயன்பாடுகளை அறிந்து கொள்வீர்கள். அதன் பிறகு முந்திரி பருப்பை சரியான முறையில் பயன்படுத்தினால் நமக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
உணவில் முந்திரி பருப்பு:
முந்திரி பருப்பு என்ற உடனே நாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அதன் உணவு பயன்பாடுகள் தான். ஏனென்றால் இந்த முந்திரி பருப்பானது நமது இந்திய உணவுகள் முதல் மேலைநாட்டு உணவுகள் வரை அனைத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது இது பாயசம் போன்ற பலவகையான இனிப்பு வகைகள் மற்றும் பொங்கல் போன்ற பல உணவுகளில் நறுமணம் மற்றும் சுவையூட்டியாக பயன்படுத்தபடுகிறது. மேலும் இதனை பயன்படுத்தி பக்கோடா, முந்திரி அல்வா போன்ற உணவுகளும் தயாரிக்கப்படுகிறது.
இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே
ஆரோக்கியத்தில் முந்திரி பருப்பு:
முந்திரி பருப்பின் ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் முந்திரிப் பருப்பில்..
- 553 மி.கி கலோரிகள்,
- 18 கி புரதம்,
- 30 கி மாவுச் சத்து,
- 3.3 கி நார்ச் சத்து,
- 44 கி கொழுப்புச் சத்து,
- 0.5 மி.கி வைட்டமின் சி,
- 0.90 மி.கி வைட்டமின் இ,
- 34.1 மைக்ரோ கிராம் வைட்டமின் கே,
- 10. 423 மி.கி வைட்டமின் பி,
- 25 மைக்ரோ கிராம் போலேட்,
- 37.00 மி.கி கால்சியம்,
- 2.19 மி.கி காப்பர்,
- 6.68 மி.கி இரும்பு,
- 292 மி.கி மக்னேசியம்,
- 1.655 மி.கி மாங்கனீசு,
- 593 மி.கி பாஸ்பரஸ்,
- 660 மி.கி பொட்டாசியம்,
- 19.90 மைக்ரோ கிராம் செலினியம்,
- 12.00 மி.கி சோடியம்
- 5.78 மி.கி ஜிங்க்
போன்ற நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இப்பொழுது தினமும் இரண்டு அல்லது மூன்று முந்திரி பருப்பினை சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கும் என்பதை காணலாம் வாங்க. அதாவது இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது, செரிமான கோளாறு நீங்குக்கின்றது, நரம்பு பலம் பெறுகின்றது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.
அழகினை மேப்படுத்துவதில் முந்திரி பருப்பு:
உங்களின் முகம் என்றும் இளமையாக இருக்க முந்திரி பருப்பு உதவுகிறது. முந்திரி பருப்பில் அதிக அளவில் காப்பர் மற்றும் விட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இது நம்முடைய சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ள நமக்கு உதவி புரியும்.
அதாவது ஒரு மிக்சி ஜாரில் மூன்று அல்லது நான்கு முந்திரி பருப்பினை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு பன்னீரை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து உங்களின் முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனால் உங்களின் முகம் என்றும் இளமையாக இருக்கும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |