மாதுளை பழத்தை சாப்பிட்டால் மட்டும் போதாது.. இதையும் தெரிச்சிருக்கணும்..!

Advertisement

மாதுளை பழத்தில் இவ்ளோ நன்மைகளா?

பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு பயன் தான் உள்ளது என்று நாம் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் அப்படி நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே ஒரு பயன் தான் உள்ளது என்றால் அது உண்மை இல்லை. ஏனென்றால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் பலவகையான பயன்கள் உள்ளது. ஆனால் அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பொருளின் பல்வேறு பயன்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல் இன்றைய பதிவில் மாதுளை பழத்தின் பல்வேறு பயன்களை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

இப்பொழுது உங்களின் மனதில் ஒரு கேள்வி எழும் அது என்னவென்றால் மாதுளை பழத்தில் அப்படி என்ன பல்வேறு பயன்கள் உள்ளது. இந்த பதிவை முழுதாக படித்தீர்கள் என்றால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கும்.

இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

மாதுளையின் பல்நோக்கு திறன்:

Pomegranate Multi Purpose in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருமே இந்த மாதுளை பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மாதுளை பழம் அவ்வளவாக பிடிக்காது.

அப்படிப்பட்டவர்கள் இந்த பதிவை முழுதாக படித்த பிறகு மாதுளை பழத்தை விரும்பி சாப்பிடுவீர்கள். ஏனென்றால் இன்று மாதுளை பழத்தின் பல்வேறு பயன்கள் அல்லது பல்நோக்கு திறனை அறிந்து கொள்ள இருக்கின்றோம். இவற்றை அறிந்து கொண்ட பிறகு மாதுளை பழத்தை வெறுத்து ஒதுக்கவே மாட்டீர்கள்.

உணவில் மாதுளை:

மாதுளை என்ற உடனே நாம் அனைவருக்குமே முதலில் நினைவிற்கு வருவது அதனின் உணவு பயன்பாடுகள் தான். ஏனென்றால் இந்த மாதுளை பழமானது நமது இந்திய உணவுகள் முதல் மேலைநாட்டு உணவுகள் வரை அனைத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதாவது இதனை பயன்படுத்தி அல்வா போன்ற பலவகையான இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதனை பழச்சாறாக தயாரித்தும் பருகலாம்.

முட்டை முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதுன்னு தெரியும் ஆனால் இந்த விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க

ஆரோக்கியத்தில் மாதுளை:

ஒரு கப் மாதுளையில் 7 கிராம் நார்சத்து, 3 கிராம் புரதம், 30% வைட்டமின் சி, 36% வைட்டமின் கே, 16% ஃபோலேட் மற்றும் 12% பொட்டாசியம் போன்ற நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இப்பொழுது ஒரு கப் மாதுளையை தினமும் சாப்பிடுவதால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பதை காணலாம் வாங்க. அதாவது கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவருவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர உதவிபுரியும்.

அதேபோல் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க உதவும். அதேபோல் மாதுளை நமது செரிமான மணடலத்தின் செயல்திறனை சீராக்கும்.

மாதுளை பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நமது பற்கள் மற்றும் ஈறுகளில் மறைந்துள்ள கிருமிகள் அழியும்.

அழகினை மேப்படுத்துவதில் மாதுளை:

Pomegranate Health benefits in Tamil

மாதுளையில் உள்ள வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள செல்லுலார் சேதத்தை குறைக்க உதவுகிறது. அதேபோல் இதனை நமது சருமத்தில் பயன்படுத்துவதால் நமது சருமத்தின் வயதான தோற்றத்தை போக்குகிறது.

மேலும் முகப்பரு மற்றும் கரும்புள்ளி போன்றவற்றை போக்க மாதுளை பழத்தோல் பொடி, ரோஸ் வாட்டர், தயிர் மற்றும் கற்றாழை ஆகியவற்றை சேர்த்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்களை புறஊதா கதிர்களின் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும் இது நமது இறந்துபோன செல்களை நீக்க உதவுகின்றது.

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose

 

Advertisement