Carrot Multipurpose
இன்றைய கால கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே சாப்பிட கூட நேரமில்லாமல் உழைக்கின்றனர். வேலைக்கு செல்கிற அவசரத்தால் காலையில் சாப்பிடாமல் கூட செல்கின்றனர். மேலும் பாஸ்ட் புட்டை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். இதனால் ஆரோக்கியம் சீர்குலைந்து போகிறது. காய்கறிகளில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் நாம் தான் காய்கறிகளை கண்டாலே ஒதுக்கி விடுகிறோம். ஒவ்வொரு காய்கறிகளிலும் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சத்துக்களை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதிலுள்ள விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த பதிவில் கேரட்டை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கேரட் பற்றிய தகவல்:
கேரட் மண்ணிற்கு அடியில் விளைய கூடிய காய்கறியாக உள்ளது. கேரட்டானது ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவை பூர்விகமாக கொண்டது. இவை அப்பியேசியே என்ற அம்பெல்லிஃபர் குடும்ப வகையை சார்ந்தது.
கேரட். “கெர்” என்னும் இந்தோ-ஐரோப்பிய வார்த்தையிலிருந்து வந்தது. “கெர்” என்றால் கொம்பு என்று பொருள். பின்னர் “கரோட்டா” என்ற லத்தீன் வார்த்தையாக மாறி, பின் ஆங்கில வார்த்தையான கேரட்டாக தற்போது உள்ளது.
கேரட்டில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஆனால் நாம் பயன்படுத்துவது ஆரஞ்சு நிறம் மட்டும் தான். மேலும் இதில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு, மற்றும் ஊதா என பல நிறங்களில் கேரட் உள்ளது.
கேரட்டில் உள்ள சத்துக்கள்:
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சிபோன்றவை உள்ளது. மேலும் வைட்டமின் சி, லுடீன், ஜியாக்சாண்டின், வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் உள்ளது.
100 கிராம் கேரட்டில் 38 கிலோகலோரி, 6.7 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் புரதம், 0.5 கிராம் கொழுப்பு, 5 கிராம் மொத்த நார்ச்சத்து, 7 mg வைட்டமின் சி, 451 mcg வைட்டமின் A மற்றும் 2706 mcg பீட்டா கரோட்டின் போன்றவை உள்ளது.
கத்திரிக்காயை குழம்பில் சேர்ப்பதற்கு முன்பு இதை தெரிஞ்சுக்கோங்க..
கேரட்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:
கேரட்டில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்மபடுத்துவதோடு, இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராமலும் பாதுகாக்க உதவுகிறது.
இவற்றில் நார்சத்து அதிகமாக உள்ளது. அதனால் செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை வராமலும் பாதுகாக்கிறது.
கேரட்டில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்பு வலிமையாக இருப்பதற்கு உதவுகிறது.
பீட்ரூட் சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள்..!
கேரட் அழகுக்குறிப்பு:
கேரட் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. தோல்களில் ஏற்படவும் பிரச்சனைகளிலுருந்து பாதுகாக்கிறது. மேலும் இவற்றில் கால்சியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளதால் முகப்பருவை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. நார்ச்சத்து இருப்பதால் தேவையற்ற கழிவுகளை நீக்குவதற்கு உதவுகிறது.
1 கேரட் எடுத்து வேக வைத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.
கேரட்டில் என்னென்ன உணவுகள் செய்யலாம்:
கேரட்டில் பல வகையான உணவுகள் செய்யலாம். அதாவது கேரட்டை வைத்து இட்லி சாம்பார், சாதம் சாம்பார் போன்றவற்றை செய்யலாம்.
கூட்டு, வறுவல், பொரியல் செய்யலாம்.
கேரட் அல்வா
கேரட் பாயசம்
சமையலில் வெண்டைக்காய் சேர்ப்பதற்கு முன்பாக அதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் |
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |