கத்திரிக்காய் பயன்கள்
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான டேஸ்ட் இருக்கும். அதவாது ஒருவருக்கு உருளைக்கிழங்கை பிடிக்கும், ஒருவருக்கு பிடிக்காது. குணம் எப்படி வேறுபட்டு இருக்கிறதோ டேஸ்ட்யும் வேறுபட்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கத்தரிக்காயை பலருக்கும் பிடிக்காத உணவாக இருக்கிறது. அதனால் இந்த பதிவில் கத்திரிக்காயில் உள்ள பல பயன்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
கத்திரிக்காய் வகைகள்:
கத்திரிக்காயில் பச்சை கத்தரிக்காய், வெளிர் பச்சை, வெள்ளை கத்தரிக்காய், ஊதா கலந்த கத்தரிக்காய் என் பல வகைகள் இருக்கிறது.
கத்தரிக்காய் ஆரோக்கிய நன்மைகள்:
மலசிக்கல்:
உடலில் நீர்ச்சத்து குறைவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் கத்தரிக்காயை வறுவல், கூட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையும் நீங்கும். மலசிக்கல் பிரச்சனை இல்லாமலும் இருக்கும்.
ஆப்பிளில் உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது..
சிறுநீரக கற்கள்:
தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பது, உப்பு அதிகமாக இருக்கும் தண்ணீரை குடிப்பது, சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகிறது. இதனை சரி செய்வதற்க்கு கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைய:
கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவி செய்கிறது. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைய நினைப்பவர்கள் தினந்தோறும் கத்தரிக்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கத்தரிக்காய் அழகு குறிப்பு:
பாதி கத்தரிக்காயை எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பளபளப்பாக காட்சியளிக்கும். மேலும் வயதான தோற்றம் ஏற்படாமலும் பாதுகாக்க்கிறது.
மூங்கிலின் பல்நோக்கு திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா
கத்திரிக்காய் ஆரோக்கியமான என்சைம்கள் கொண்டுள்ளது, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் முடியை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதற்கு நீங்கள் கத்தரிக்காயை அரைத்து அதனை வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து தலையில் மசாஜ் செய்து தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |