தேங்காய் எண்ணெய் பயன்கள் | Coconut Oil Uses in Tamil
அனைவரது வீட்டிலும் மிகவும் எளிமையாக இருக்கக்கூடிய பொருள் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெயை நம்மில் பலரும் தலை முடிக்கு, சருமத்திற்கு பயன்படுத்தி வருகிறோம், ஆனால் தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? அட ஆமாங்க Coconut Oil-ல் பல விதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த தொகுப்பில் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நோய்களை குணப்படுத்த:

Coconut Oil Benefits in Tamil: தேங்காய் எண்ணெயில் இருக்கும் மீடியம் செயின் ட்ரை கிளிசரைட் எனும் பொருள் நேரடியாக கல்லீரலை சென்றடைகிறது. இது கல்லீரலுக்கு சென்று ketone body என்று சொல்லக்கூடிய வேதி பொருளை உருவாக்குகிறது. இந்த ketone body உடலில் உருவாகுவதால் அவை வலிப்பு நோயை சரி செய்யவும், அல்சைமர் நோய், மன நோய்களை சரி செய்யவும் உதவுகிறது.
இதயத்தை பாதுகாக்க – தேங்காய் எண்ணெய் பயன்கள்

Coconut Oil Benefits Tamil: இதயத்தை பாதுகாப்பதற்கு உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம் LDL எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் பாதுகாத்து HDL எனும் நல்ல கொழுப்புகளை உடலில் அதிகரிக்க உதவுகிறது.
சிறுநீரக நோய் – Coconut Oil Benefits in Tamil

- சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளலாம்.
உடல் எடை குறைய – Coconut Oil Uses in Tamil:

- Thengai Ennai in Tamil: உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கலாம்.
வாய் துர்நாற்றம் நீங்க – Coconut Oil Benefits in Tamil:

தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்தால் (Oil Pulling) வாய் துர்நாற்றம், பற்சொத்தை, ஈறு பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய உதவும்.
சருமத்திற்கு :

தேங்காய் எண்ணெய் பயன்கள்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தேங்காய் எண்ணெயில் இருப்பதால் சருமத்தில் இருக்கும் தேவையற்ற கிருமிகளை நீக்குவதற்கும், முக சுருக்கங்களை சரி செய்யவும் உதவுகிறது. கோடை காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுப்பதற்கு தேங்காய் எண்ணெயை தோலின் மேல் தடவி வரலாம். ஆனால் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். அதனால் ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும்.
தலைமுடி:

பொடுகு தொல்லை, இளம் வயதில் ஒரு சிலருக்கு ஏற்படும் நரை, பேன் தொல்லை போன்றவற்றை சரி செய்யவும், தலைமுடி நன்றாக வளர்வதற்கும் உதவுகிறது.
உடல் சூட்டை தணிக்க :

தேங்காய் எண்ணெய் பயன்கள்: உடல் சூடு உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் உடல் உஷ்ணம் நீங்குவதோடு, கண்களும் குளிர்ச்சி பெறும்.
காயங்கள்

அடிபட்டால் ஏற்படும் காயங்கள், ஒவ்வாமையால் ஏற்படும் புண்கள் போன்றவற்றை சரி செய்ய காயத்தின் மீது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் விரைவில் புண்கள், காயங்கள் சரியாகிவிடும்.
தேங்காய் எண்ணெய் பயன்கள்

கடையில் விற்கும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது வீட்டில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த:
தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கிறது இவை இன்சுலின் சுரப்பதை தடுக்கிறது. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது. மேலும் இவற்றில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இவை உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. இந்த தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
| நல்லெண்ணெய் பயன்கள் |
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |














