பால் குடிக்கும் பழக்கம்
வணக்கம் நண்பர்களே..! பால் குடிக்கும் பழக்கம் என்பது உடலுக்கு நல்லது. அந்த பாலில் அதிக அளவு உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. அதுபோல பாலில் கொழுப்பு சத்துக்களும் இருக்கிறது. அதனால் எதையும் நாம் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை போலவே பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுகள் இருக்கின்றன, அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்…!
பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்:
பாலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் இவை அனைத்தும் நிறைந்து இருக்கின்றன. அதே நேரத்தில் பாலுடன் சில உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அந்த உணவு பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- வாழைப்பழம்
- முள்ளங்கி
- மீன்
- பிஸ்கட்
- புளிப்பு பொருட்கள்
ஒரு வாழைப்பழம் அதனுடன் 1 டம்ளர் பால் குடித்தால் போதும் உடலுக்கு நல்லது என்று சொல்வார்கள். இந்த இரண்டிலும் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. ஆனால் அதை ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது. அப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும் போது வயிறு செரிமானம் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்று. ஆனால் சாப்பாட்டில் பொருந்தாத உணவு பட்டியலில் முள்ளங்கியும் இருக்கிறது. அதனால் முள்ளங்கியுடன் பாலு சேர்த்து குடிக்க கூடாது. இரண்டிற்கும் 2 மணி நேரம் இடைவெளி விட்டு அதன் பிறகு சாப்பிட வேண்டும்.
மீன் சாப்பிடும் போது பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பால் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது ஆனால் மீன் உடலுக்கு வெப்பம்மூட்டும் தன்மையை தரக்கூடியது. இதை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது செரிமான கோளாறு இது போன்ற பிரச்சனைகள் வரும். மீன் மட்டுமின்றி இதர இறைச்சி உணவுகளையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது உடலுக்கு நல்லது.
பால் குடிக்கும் போது பிஸ்கட், கேக், காரமான உணவுகள் சாப்பிடுவது சிலருக்கு வழக்கமாக இருக்கும். அது மாதிரி சாப்பிடுவதை தவிர்ப்பதனால் வயிறு சமந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பால் குடிக்கும் போது புளிப்பு சம்பந்தமான உணவுகள் சாப்பிடாதீர்கள். அதுமட்டும் இல்லாமல் பாலு குடிக்கும் போது வைட்டமின் C உள்ள பழங்களையும் சாப்பிடாதீர்கள். ஒரு வேளை அப்படி சாப்பிடும்போது வயிற்றில் பால் உறைந்து விடும். அதனால் வாய் மற்றும் நெஞ்சு எரிச்சல், சளி, இருமல் இதுபோன்ற பிரச்சனைகளும் வரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |