சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் ஏற்படும் விளைவுகள்..!

drinking water while eating is good or bad

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? | Drinking Water While Eating is Good or Bad

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் 🙏.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி தான்.. நாம் உயிர் வாழ தண்ணீர் என்பது மிகவும் அவசியம்.. சாப்பாடு இல்லாமல் கூட சில நாட்கள் வாழ முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது. அனைவருமே ஒருநாளும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். நமது உடலில் தண்ணீர் போதுமான அளவு இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். இருந்தாலும் சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவது என்பது மிகவும் தவறான பழக்கம் ஆகும். அது ஏன் என்று இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

No: 1

உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று, உடல் எடையை அதிகரிக்கும். ஏனென்றால், இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பை உருவாக்கி, பின்னர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் கூட உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது.

No: 2

உமிழ்நீர் செரிமானத்தின் இன்றியமையாத அங்கமாகும், இது உணவை உடைத்து மென்மையாக்க உதவுகிறது. இருப்பினும், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது.

No: 3

நாம் சாப்பிடும் போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை நமது உடல் சிறிய குடல் வழியாக மெதுவான வேகத்தில் குறைவான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.

No: 4

சாப்பிடும் பொது அதிகளவு தண்ணீர் அருந்தவத்தால் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இதனால் எடை அதிகரிக்கும். இது வெறும் தண்ணீருக்கு மட்டும் பொருந்தாது; உங்கள் உணவோடு சாறு அல்லது சோடா குடிப்பது உங்கள் உடல் எவ்வளவு இன்சுலின் உற்பத்தி செய்கிறது என்பதையும் பாதிக்கும்.

தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படும் நேரங்கள்:

தூங்கி எழுந்த பிறகு:

தூங்கி காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடியுங்கள். இது உங்கள் உள் உறுப்புகளை செயல்படுத்த உதவும். உங்கள் முதல் உணவிற்கு முன் எந்த நச்சுப் பொருட்களையும் அகற்ற தண்ணீர் உதவும்.

உணவுக்கு முன்:

நீங்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும். உணவுக்கு முன்னும் பின்னும் மிக விரைவில் குடிக்க வேண்டாம். ஏனெனில் தண்ணீர் செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்யும். உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

குளிப்பதற்கு முன்:

குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும், இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil