உலர் திராட்சை பயன்கள்| Benefits of Eating Dry Grapes in Empty Stomach
இன்றைய பதிவில் வெறும் வயிற்றில் பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக பாதாம் மற்றும் திராட்சையை சும்மா சாப்பிட்டாலே நன்மைகள் இருக்கு நான் ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடனும் என்று யோசிக்காதீர்கள். சும்மா சாப்பிட்டாலே அவ்வளவு நன்மை இருக்கின்றது. அதுவே வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றது. வாங்க என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளலாம்.
சுறுசுறுப்பாக இருக்க:
பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மாதவிடாய் வலி குறைய:
ஊற வைத்த பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவதனால் பெண்களுக்கு மாதவிடாய் வரும் நாட்களில் வரும் வலி பிரச்சனையிலிருந்து தடுக்கிறது.
செரிமானம் அதிகரிக்க:
தினமும் இதனை காலையில் சாப்பிடுவதால் செரிமான திறனை அதிகரிக்கிறது.
ஞாபக சக்தி அதிகரிக்க:
ஊறவைத்த திராட்சை, பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் ஞாபக திறனை அதிகரிக்கிறது.
சரும பொலிவு:
பாதாம் மற்றும் திராட்சையின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்திற்கும் நல்லது. முடி ஆரோக்கியமாக வளரவும், சருமம் பொலிவாகவும் இருக்க தினமும் ஊறவைத்த பாதாம், திராட்சை சாப்பிட வேண்டும்.
கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி.?
ஊற வைத்து சாப்பிடுவதனால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதயத்திற்கும் நல்லது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
ஊறவைத்த பாதாமில் வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளன. அவை புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.
பாதாம் மற்றும் திராட்சையில் புரதங்கள், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதனால் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |