காதில் சீழ் வடிதல் குணமாக | Ear Discharge in Tamil
பொதுவாக காதில் தண்ணீர் புகுவது என்பது நமக்கு அடிக்கடி நடைபெறும் விஷயம் தான். ஆற்றில், கடலில், குளத்தில், ஸ்விம்மிங் ஃபுல் இன்னும் ஏன் நாம் வீட்டில் குளிக்கும் போதும் காதுக்குள் தண்ணீர் புகுவது சகஜமான ஒன்று தான். காதுக்குள் தண்ணீர் புகுந்தால் காது அடைத்துக்கொள்ளும். சிலருக்கு காதில் தண்ணீர் புகுந்துவிட்ட பிறகு காதில் நீர் கோர்த்துக்கொண்டு சீழ் வடிய ஆரம்பிக்கும். ஆக காதுகள் தண்ணீர் சென்றுவிட்டாள் உடனடியாக அந்த நீரை அகற்றுவதற்க்கான வழியை பார்க்க வேண்டும். இல்லையென்றால் காதுகளில் தொற்று ஏற்பட்டு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆக காதில் தண்ணீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சரி இன்றைய பதிவில் காதில் சீழ் வடிய என்ன காரணம், எதனால் காதில் சீல் வடிகிறது, காதில் சீழ் வடிதல் குணமாக என்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்களை பற்றி இன்றிய பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
காதில் சீழ் வடிய என்ன காரணம்?
நமது காதை மூன்று பகுதிகளாக பிரிகின்றன. அவற்றில் செவிப்பறையில் அடிபட்டாலோ அல்லது அடிக்கடி தொற்றுகள் ஏற்பட்டாலோ அவற்றில் ஓட்டை விழும். இந்த ஓட்டையினால் என்ன ஏற்படும் என்றால். காதுக்குள் தண்ணீர் புகுந்தாலோ, அல்லது சளிபிடித்தலோ நடுச்செவியில் சீழ் உற்பத்தி ஆகும். அந்த சீழ் இந்த ஓட்டை வழியாக வெளீயே வருவது தான் சீழ் ஆகும். சிலருக்கு இந்த சீழ் நிறைய உற்பத்தியாகி காதில் இருந்து வெளியே சீழ் வர ஆரம்பித்துவிடும். சிலருக்கு இது போன்று இருக்காது லேசாக காதுக்குள் பிசுபிசுப்பு தன்மை இருக்குறமாதிரி இருக்கும். இதனை சிலர் கட்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின் என்ன பிரச்சனை ஏற்படும் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காது வலி பிரச்சனையில் இருந்து நீங்க வீட்டு வைத்தியம்..!
இதனை நாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் நாளடைவில் காதுக்குள் செவிப்பறையை இல்லாமல் போய்விடும். பிறகு ஓரங்களில் இருக்கும் எலும்புகளை அரிக்க ஆரம்பிக்கும். இதைவிட முக்கியமான விஷயம் என்னெவென்றால் முகத்திற்கு சப்லை செய்யும் நரம்புகள் நமது காதின் வழியாகத்தான் முகத்திற்கு வருகிறது. அந்த நரம்புகளும் பாதிக்கப்பட்டால் முக வாதம் வருவதற்கும் அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
காதில் நீர் கோர்த்தல் குணமாக என்ன செய்வது?
காதில் சீழ் பிடித்ததை குணப்படுத்துவற்கு, வீக்கத்தை குறைப்பதற்கு முதலில் நீங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியதாக இருக்கும்.
செவிப்பறையில் உள்ள ஓட்டை ரொம்ப பெரியதாக இருக்கும் போது அது தானாக ஆறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆக காதின் உள்ள வேறொரு புதிய செவிப்பறையை வைக்கவேண்டியதாக இருக்கும். அதற்கு Microscopic Surgery அறுவை சிகிச்சை தான் தீர்வு.
இந்த Microscopic Surgery-ஐ நீங்கள் செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் மருத்துவனையில் இருந்து டிர்சார்ஜ் ஆக்கிக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு பக்க காது வலி குணமாக வைத்தியம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |