எப்சம் உப்பு பயன்கள் | Epsom Salt Benefits in Tamil | Epsom Salt in Tamil

Advertisement

எப்சம் உப்பு பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு? – Epsom Salt Uses in Tamil

Epsom Salt Uses in Tamil:- ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பயன்படும் ஒரு அருமையான ஆரோக்கியம் குறிப்பு பற்றி தெரிந்துகொள்வோம். அதாவது எப்சம் உப்பை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும், சரும அழகையும் எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்சம் உப்பை நாம் பலவகையான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.

எப்சம் உப்பு என்றால் என்ன? / what is epsom salt in tamil? எப்சம் உப்பு, நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு இல்லை. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே ‘உப்பு’ என்றழைக்கப்படுகிறது. இந்த எப்சம் உப்பு மளிகைக்கடைகளில் கிடைக்கும் பொருள் கிடையாது, மருந்துக் கடைகளில் மட்டுமே கிடைக்கும். சரி இந்த எப்சம் உப்பு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

கவுனி அரிசி மருத்துவ பயன்கள்..!

எப்சம் உப்பின் பயன்கள் – Epsom Salt Benefits in Tamil – Epsom Salt in Tamil

கால் வலி குணமாக:-

கால் வலி

Epsom Salt Uses in Tamil:- கால் வலியால் அதிகம் அவஸ்த்தைப்படுபவர்கள் தங்கள் முழங்கால் முழுவதும் முழுகும் அளவிற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்புங்கள். பின் அந்த நீரில் சிறிதளவு எப்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பின் தங்கள் கால்களை அந்த நீரில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதினால் கணுக்கால் வலி முழுவதும் சரியாகிவிடும். அதேபோல் இந்த வைத்தியம் தலைவலிக்கு ஒரு சிறந்த மருந்தாகும். இந்த ஆரோக்கிய குறிப்பை தொடர்ந்து செய்து வருவதினால் உடலில் உள்ள நரம்புகளுக்கு புத்துணர்ச்சிக்கிடைக்கும் இதனால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

எப்சம் உப்பு பயன்கள் – சரும பராமரிப்புக்கு:-

முகப்பரு

Epsom salt benefits in tamil – பொதுவாக முகத்தில் பருக்கள் தோன்றினால் சிறு சிறு துளைகள் இருக்கும். இந்த துளைகள் நீங்க எப்சம் உப்பு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. அதாவது தாங்கள் ஃபேஸ் வாஸ் செய்வதற்கு பயன்படுத்தும் க்ரீமுடன் 1/2 ஸ்பூன் எப்சம் உப்பை கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள், பின் 20 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடந்து செய்வதினால் முகப்பருக்கள் மற்றும் முகப்பருக்களினால் ஏற்படும் துளைகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியாக காணப்படும்.

வீட்டு தோட்டத்தை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க:-

வீட்டு தோட்டத்தை

உங்கள் வீட்டு தோட்டத்தை பூச்சிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமா? அப்படி என்றால் இப்போதே சிறிதளவு எப்சன் உப்பை தங்கள் தோட்டத்தில் தெளித்து விடுங்கள். இதனால் தங்கள் வீட்டு தோட்டத்தை வண்டு, பூச்சிகள் மற்றும் புழுக்களின் தாக்குதல்களிடமிருந்து பாதுகாக்கலாம்.

பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்..!

எப்சம் உப்பு பயன்கள் – பாத்திரங்கள் பளபளக்க:

பாத்திரங்கள் பளபளக்க

Epsom salt benefits in tamil – உங்கள் சமையலறையில் உள்ள பாத்திரங்கள் மிகவும் கரிப்படிந்தும், எண்ணெய் பிசுக்கு படிந்து காணப்படுகின்றதா? அந்த பாத்திரம் மீண்டும் பளபளக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள். அதாவது பாத்திரம் துலக்கும் சோப்புடன் சிறிதளவு எப்சம் உப்பை சேர்த்து பாத்திரங்களை துலக்குங்கள். இவ்வாறு செய்தால் தாங்களே வியந்துபோவீர்கள். அதாவது தாங்கள் கடையில் புதிதாக வாங்கிய பாத்திரங்கள் போல் பளபளக்கும்.

கூந்தல் பராமரிப்புக்கு:-

கூந்தல் பராமரிப்பு

தலைமுடியில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை ஆரோக்கியமான முறையில் நீக்க வேண்டுமென்றால், தாங்கள் தலை முடிக்கு பயன்படுத்தும் ஹேர் கண்டிஷனரில் சிறிதளவு எப்சம் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் தலைமுடிக்கு பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதினால் தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை மிக எளிமையாக நீக்கிவிடலாம். இந்த முறையை பயன்படுத்துவதினால் கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.

புற்கள் என்றும் பசுமையாக இருக்க:

Purkal

Epsom Salt Benefits in Tamil – உங்கள் வீட்டு தோட்டத்தில் புற்கள் என்றும் நல்ல பசுமையாக இருக்க வேண்டுமா?  அப்படி என்றால் ஒரு பீப்பாய் (Barrel) முழுவதும் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள். பின் அவற்றில் இரண்டு ஸ்பூன் எப்சம் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் இந்த நீரை புற்களின் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு புற்கள் மீது தெளிப்பதினால் புற்களுக்கு அதிகளவு இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் சத்து கிடைக்கும் இதனால் புற்கள் என்றும் பசுமையாக இருக்கும்.

எப்சம் உப்பில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க்:-

face mask

சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி சருமம் என்றும் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

  1. முட்டை – ஒன்று
  2. பான்டோதெனிக் அமிலம் தூள் (Punicic Acid) – அரை ஸ்பூன்
  3. தக்காளி – அரை துண்டு
  4. எப்சம் உப்பு – ஒரு ஸ்பூன்
  5. கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
  6. தைம் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்

Epsom Salt Benefits in Tamil – மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சுத்தமான பவுலில் சேர்த்து நன்றாக கலந்து. பின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யுங்கள். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி சருமம் என்றும் பளபளப்பாக இருக்கும்.

சுளுக்கு வீக்கம் குறைய:-

சுளுக்கு

எதிர்பாராமல் ஏற்படும் காயங்கள் மற்றும் சுழுக்குகள் சரியாக எப்சம் உப்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஆம் காயங்கள் மற்றும் சுழுக்குகள் சரியாக வெதுவெதுப்பான நீரில் இரண்டு கப் எப்சம் உப்பை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்த நீரில், பாதிக்கபட்ட இடத்தை ஊற வைக்கவும். இரண்டாக பிளவுபட்ட இடத்தை எப்சம் உப்புக் கலந்த நீரில் ஊற வைக்கும்பொழுது அந்த பிளவு மறைய ஆரம்பிக்கும்.

கால் துர்நாற்றம் நீங்க: 

கால் துர்நாற்றம்

கால்களில் ஏற்படும் துர்நாற்றங்கள் நீங்க ஒரு பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி கொள்ளுங்கள். பின் அவற்றில் சிறிதளவு எப்சம் உப்பை கலந்து தங்கள் கால்களை நன்றாக 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இவ்வாறு உறவைப்பதினால் கால்களில் ஏற்படும் துர்நாற்றங்கள் அனைத்தும் நீங்கி கால்கள் மென்மையாக காணப்படும்.

பக்க விளைவுகள்:-

எப்சன் உப்பு பக்க விளைவுகளை ஏற்படும் தன்மை கொண்டது. தாங்கள் எப்சன் உப்பை பயன்படுத்தும்பொழுது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்து. ஊட்டச்சத்து குறைபாடு, தீவிர வயிற்றுப்போக்கு, உயர் கால்சியம் அளவு, சோர்வு, தசை வலிப்பு, தசைசுரிப்பு அல்லது தசை வலி, ஒழுங்கற்ற கண் செயல்பாடு போன்றவை நம் உடலில் ஏற்படும் சில பாதிப்புகளாகும். எப்சம் உப்பை உடலின் வெளிப்புறம் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றாலும், இதனை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement