தர்பூசணி சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத பொருட்கள்
இந்த கோடை வெயிலை சமாளிக்க முடியமால் மோர், குளிர்பானங்கள், இளநீர் என்று குடித்து வருகிறோம். அதில் இந்த கோடையில் கிடைப்பது தர்பூசணி தான். சாலையோரங்களில் தள்ளுவண்டியில் தர்பூசணியை விற்பார்கள் அதை பார்த்தாலே வாங்கி விட்டு தான் வருவோம். அப்படிப்பட்ட இந்த தர்பூசணி தாகங்களை தணிக்கிறது. இருந்தாலும் இந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு சில உணவுகளை சேர்த்து கூடாது அது என்னனென்ன உணவுகள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்:
இனிமே தர்பூசணி விதைகளை தூக்கி எறியாதீர்கள்! அதன் நன்மையை அறிந்து கொள்ளுங்கள்..!
முட்டை:
தர்பூசணி சாப்பிட்ட பிறகு முட்டை அல்லது முட்டையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது. ஏனென்றால் முட்டையில் ஒமேகா 3 இருப்பதால் செரிமான பிரச்சனை, ஏற்பட்டு மலசிக்கல் பிரச்சனை ஏற்படும், மேலும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தகூடியது. அதனால் தர்பூசணி சாப்பிட்ட பிறகு முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.புரோட்டின் உணவுகள்:
புரோட்டின் சத்து நிறைந்த உணவுகளான மீன்கள், பயறு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை தர்பூசணி சாப்பிட பிறகு சாப்பிட கூடாது. ஏனென்றால் தர்ப்பூசணியில் வைட்டமின்களும் மினரல்களும், மாவுச்சத்தும் உள்ளது. இதனால் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது செரிமானத்தை பிரச்சனையை ஏற்படுத்தும்.
பால்:
தர்பூசணி பழத்தை சாப்பிட பிறகு பாலை குடிக்க கூடாது. ஏனென்றால் தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். அவை செரிமான அமைப்பை பாதிக்கின்றன. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படும்.
மேல் கூறப்பட்டுள்ள மூன்று உணவுகளையும் தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டு விடாதீர்கள். சாப்பிட வேண்டுமென்றால் தர்பூசணி சாப்பிட்ட பிறகு 30 நிமிடம் கழித்து சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |