சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன..?

Advertisement

சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாதவை

மனிதர்களாக பிறந்த அனைவருமே நலமுடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி இந்த இரண்டும் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நமது உடலை பொறுத்தவரை எண்ணற்ற உறுப்புகள் இருக்கிறது. அந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையினை செய்கிறது. அத்தகைய உடல் ஆரோக்கியத்திற்காக என்ன தான் நாம் பார்த்து பார்த்து ஆரோக்கியமான உணவுகள் என்று நினைத்து சாப்பிட்டாலும் கூட எல்லா வகையான உணவுகளும் நமது உடலுக்கு நல்லது கிடையாது.

இப்படிப்பட்ட  உடலில் அதிகப்படியான தாதுக்கள் சேரும் போது அந்த தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிகின்றன. இது மாதிரி படியும் தாதுக்கள் பின்பு சிறுநீரகத்தில் கற்களாக உருவாகிறது.  சிறுநீரகத்தில் படியும் கல் சிறுநீர் வழியாக வெளியே வந்து விடும். ஒருவேளை அப்படி வரவில்லை என்றால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சிறுநீரக கல் பிரச்சனை வந்தால் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..!

Foods to Avoid in Kidney Stone Problem:

ஆக்சலேட் உணவுப் பொருட்கள்:

சிறுநீரக கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருந்தால் ஆக்சலேட் சார்ந்த உணவினை அதிகமாக எடுத்துகொள்ள  கூடாது. அதாவது திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சக்கரவள்ளி கிழங்கு, வால்நெட் மற்றும் ஸ்ட்ராபெரி ஆகிய உணவுகளில் அதிகமான ஆக்சலேட் இருப்பதால் இவற்றை எல்லாம் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

இதற்கு மாறாக அதிகம் கால்சியம் சார்ந்த உணவினை சாப்பாட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.

புரதம் அதிகம் உள்ள உணவுகள்:

stone problem avoid foods in tamil

மீன், ஆட்டு கறி, முட்டை மற்றும் மாட்டு இறைச்சி போன்ற உணவுகளில் அதிகமான புரதங்கள் இருப்பதால் இதனை சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஏனென்றால் அதிக புரதம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மீண்டும் புதிதாக கல் உருவாகும் பிரச்சனைஉள்ளது.

தக்காளி:

சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாதவை

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தக்காளியில் வைட்டமின் C இருப்பதால் இது உடலில் ஆக்சலேட் அளவை அதிகரிக்க செய்து சிறுநீரக கல் பிரச்சனையை அதிகரிக்க செய்யும். தக்காளி மட்டும் இல்லாமல் மற்ற வைட்டமின் C  உள்ள உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

கிட்னி கல் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

உப்பு அதிகம் உள்ள உணவுகள்:

kidney stone avoid food in tamil

சாதாரணமாக இருக்கும் நபர்கள் உப்பு அதிகம் உள்ள மற்றும் இனிப்பு அதிக உள்ள உணவுகளை சாப்பிட கூடாத நிலையில் இருக்கும் போது சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இதுபோன்ற உணவினை சுத்தமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சிறுநீரக கற்கள் அதிகாமாக உருவாகுவதற்கு தூண்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வறட்சியான உணவுகள்:

kidney stone problems in tamil

சிறுநீரகத்தில் கல் இருக்கும் போது அதிகம் தண்ணீர் உள்ள உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் நாம் சிறுநீர் கழிக்கும் போது கல் அதன் வழியாக வெளியேறும்.

அதனால் வறட்சியான மற்றும் கடைகளில் விற்கும் பதப்படுத்த உணவினை சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். 

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த 5 விஷயத்தை கடைபிடிக்கவும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement