கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்?

Advertisement

கிரீன் டீ பயன்கள்..! Green Tea Benefits in Tamil..!

காலை பொழுதாக இருந்தாலும் சரி.. இல்லை மாலை பொழுதாக இருந்தாலும் சரி.. உடலுக்கும் மனதிற்கும் அதிக புத்துணர்ச்சி அளிக்க நிறைய பானங்கள் இருக்கிறது. ஆனால் நாம் அழகிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படக்கூடிய கிரீன் டீயை பற்றித்தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். ஒரு கப் கீரின் டீ பத்து ஆப்பிள் பலன்களுக்கு சமம். தினமும் நீங்கள் காலை ஒருகப் கிரீன் டீயை அருந்திவந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேறி உடலை மெலிதாக வைத்துக்கொள்ளலாம். சரி வாங்க தினமும் கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி இப்பொழுது படித்தறியலாம்.

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்?

green tea

உடல் எடை குறைய:

Green Tea Benefits in Tamil – உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கிரீன் டீ ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. தினமும் காலை வேளைகளில் ஒரு கப் கிரீன் டீயை தொடர்ந்து அருந்தி வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேற்றி உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

புற்று நோய் வராமல் தடுக்க:

Green Tea Benefits in Tamil – இப்போது உள்ள காலகட்டத்தில் பலரும் பலவிதமான புற்று நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால், தினமும் ஒரு கப் கீரின் டீ அருந்தி வாருங்கள். இந்த கிரீன் டீயில் உள்ள பாலிபெனால் எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று, அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதயம் நோய்:

Green Tea Benefits in Tamil – பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் கிரீன் டீ அருந்தினால் அவர்களுக்கு இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்று சில ஆய்வுகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த கிரீன் டீ இலைகளில் உள்ள ”கேட்டச்சின்” எனும் வேதிப்பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் இந்த கீரின் டீயை அருந்தி வந்தால் போதும் உங்களுடைய இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

இரண்டாம் நிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த:

Green Tea Benefits in Tamil – நீரிழிவு நோயில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை என்று இரண்டு வகைகள் இருக்கிறது. இவற்றில் இரண்டாம் நிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கிரீன் டீ பயன்படுகிறது. இப்படி பட்டவர்கள் தினமும் ஒரு முறை கிரீன் டீ அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் உடல் சுறுசுறுப்பாக இருக்க தேவையான சக்தியும் கிடைக்கும்.

பக்கவாதம்:

Green Tea Benefits in Tamil – தினமும் கிரீன் டீ அருந்தி வருபவர்களுக்கு மூளை நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படும் வாதம், பக்கவாதம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உடலில் உள்ள நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கிரீன் டீ உதவுகிறது.

10 அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் – அது என்ன ?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement