கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..!

Advertisement

Groundnut Oil Benefits in Tamil

அக்காலத்தில் உள்ள மக்கள் செக்கில் ஆட்டிய இயற்கையான எண்ணெய் வகைகளையே பயன்படுத்தி வந்தார்கள். அதாவது தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வந்தார்கள். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தார்கள். ஆனால் இக்காலத்தில் நம் ஊர்களில் தயாரிக்கப்படும் எண்ணெய்களில் கொழுப்புகள் போன்றவை இருக்கிறது என்று  அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு கண்ட கண்ட எண்ணெய்களை எல்லாம் சமைப்பதற்கு பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். “வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு” என்று ஒரு பழமொழி ஒன்று உள்ளது. அதாவது கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்தி நோய்வாய் பட்டு மருத்துவருக்கு பணம் கொடுப்பதை விட வணிகருக்கு அந்த பணத்தை கொடுத்து இயற்கையான சத்துக்கள் நிறைந்த எண்ணெய்யை வாங்கிவிடலாம். அந்த வகையில் கடலை எண்ணெயை பயன்படுத்துவதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளன என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கடலை எண்ணெய் நன்மைகள்

கடலை எண்ணெய் நன்மைகள்

கொழுப்பு சத்து என்பது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான ஒன்று. ஆனால் கொழுப்பு என்றாலே தேவையில்லாத ஒன்று என்ற எண்ணம் பலபேருக்கு இருக்கிறது. ஆனால் கொழுப்பில் நல்ல கொழுப்பும் இருக்கிறது கெட்ட கொழுப்பும் இருக்கிறது.

ம் உடல் சீராக செயல்படுவதற்கு நல்ல கொழுப்பு தேவை. Monounsaturated Fat என்ற நல்ல கொழுப்பு கடலை எண்ணெயில் இருக்கிறது.இது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேருவதை தவிர்த்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. 

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்.

 

கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

புற்றுநோயை எதிர்க்கும் சக்தி:

கடலை எண்ணெயில் விட்டமின் இ அதிகமாக இருக்கிறது. நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் இ அளவை 1 ஸ்பூன் கடலை எண்ணெய் நமக்கு தருகிறது.

இந்த வைட்டமின் இ Antioxidant ஆக செயல்படுகிறது. எனவே புற்றுநோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மையும் கடலை எண்ணெயிற்கு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.

இதய நோய் அபாயத்தை குறைக்கும்:

 groundnut oil benefits in tamil

 கடலை எண்ணெயில் Monounsaturated Fats (MUFA) மற்றும் Polyunsaturated Fats போன்றவைகள் உள்ளன. இவை இதய நோய் தொடர்புடைய நோய்களை குறைக்கிறது. எனவே கடலை எண்ணெயை உணவில் எடுத்து கொள்வதன் மூலம் 30%சதவீதம் வரை இதய நோய் வராமல் தடுக்க முடிகிறது. 
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது:

கடலை எண்ணெயில் உள்ள கொழுப்பு சத்தானது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் இருக்க கூடிய சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது.

கண்களை பாதுகாக்குகிறது:

 groundnut oil benefits in tamil

கடலை எண்ணெயில் உள்ள வைட்டமின் இ கண்கணில் ஏற்படும் கண்புரையை தடுத்து கண்களுக்கு தெளிவான பார்வையை அளிக்கிறது.

மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது:

 groundnut oil benefits in tamil

கடலை எண்ணெயில் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இது மூளையின் வளர்ச்சி, மூளையின் செய்லபாடு போன்றவற்றை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் வயதான காலத்தில் ஏற்படும் நியாபக மறதியையும் தடுக்கிறது.

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்.

கடலை எண்ணெய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

கடைகளில் இருக்கும் ரீபைண்ட் கடலை எண்ணெயை வாங்குவதை விட பாரம்பரிய முறைப்படி மரச்செக்கு எண்ணெயில் ஆட்டிய கடலை எண்ணெயை பயன்படுத்துவதே நல்லது. அதை விட நீங்கள் கடலையை வாங்கி செக்கில் கொடுத்து ஆட்டுவதே மிகவும் நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement