முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர டிப்ஸ்..!

Hair Fall Tips in Tamil

முடி வளர என்ன செய்ய வேண்டும்? Hair Fall Tips in Tamil..?

இப்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கக்கூடிய ஒரு விஷயம் என்றால் அது முடி உதிர்வு பிரச்சனை தான். இந்த முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க பலவகையான ஹேர் ஆயிலை பயன்படுத்துவார்கள். இருந்தாலும் அவற்றை பயன்படுத்தியும் எந்த ஒரு ரிசல்ட்டும் கிடைக்காது. இந்த முடி உதிர்வுக்கு என்ன காரணம் என்று நாம் தெரிந்துகொண்டு, அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளும்போது முடி உதிர்வு நின்று, முடி அடர்த்தியாக மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும். சரி முடி வளர நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

முடி உதிர முக்கிய காரணம்:-

 • பொடுகு தொல்லை அதிமாக இருந்தால், முடி உதிர்வு பிரச்சனையும் அதிகமாக இருக்கும்.
 • உடலில் ஏதாவது நோய் இருந்தால் அதிகப்படியான முடி உதிர ஆரம்பிக்கும். அதாவது தங்களுக்கு தைராயிடு பிரச்சனை இருக்கிறது என்றால் முடி உதிர ஆரம்பிக்கும்.
 • மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை இருந்தாலும் அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.
 • ஒருவருக்கு ஊட்டசத்து குறைபாடு பிரச்சனை இருக்கின்றது என்றாலும் அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.
 • அதிகளவு கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்தினாலும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.
 • மரபு வழி காரணங்கள் மாத்திரைகளின் பக்கவிளைவு காரணமாகவும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.

முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்:-

 1. ஒமேகா 3
 2. புரோட்டின்
 3. பயோட்டின்
 4. சல்பர்
 5. பீட்டா கரோட்டின்
 6. இரும்பு சத்து
 7. ஜிங்
 8. வைட்டமின் எ,சி,இ

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களாகும். எனவே அன்றாட உணவு முறையில் இந்த ஊட்டச்சத்துக்களை அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறமுடியும்.

சரி இந்த ஊட்டச்சத்துக்கள் என்னென்ன உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது என்பதை இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகள் – omega 3 foods

 • பாதாம்
 • வால்நட்
 • ஆளிவிதை
 • நெய்மீன்

புரோட்டின் அதிகம் உள்ள உணவுகள்

protein

 • முட்டை
 • இறைச்சி
 • சிக்கன்
 • பன்னீர்
 • காளான்
 • பால்
 • தயிர்

பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள உணவுகள்

beta carotene foods

 • காரட்
 • பூசணிக்காய்
 • குடமிளகாய்

சல்பர் அதிகம் உள்ள உணவுகள்

sulfur food

 • பூண்டு
 • வெங்காயம்
 • முட்டை மஞ்சள் கரு

பயோட்டின் அதிகம் உள்ள உணவுகள்

biotin foods

 • கீரைகள்
 • காளான்
 • காளிப்பிளேவர்
 • நட்ஸ்
 • அவகோடா
 • முட்டை
10 நாளில் 10 கிலோ உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..!

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர டிப்ஸ் – Hair Fall Tips in Tamil:

Hair Fall Tips in Tamil: 1

ஒருவருக்கு அதிக மன அழுத்தம் இருந்தாலே அவர்களுக்கு அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். எனவே எந்த ஒரு காரணமாக இருந்தாலும் சரி அதை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.

Hair Fall Tips in Tamil: 2

முடி வளர்ச்சியை தூண்ட தினமும் சிறிது நேரம் தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்யுங்கள். இதனால் தலைமுடியின் வேர் பகுதியில் இரத்த ஓட்டம் சரியாக செயல்படுகிறது. இதன் காரணமாக முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.

Hair Fall Tips in Tamil: 3

அதேபோல் தலை பகுதில் இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், முடி வளர்ச்சியை தூண்டவும் சில உடற்பயிற்சிகள் இருக்கிறது அதனை தினமும் செய்து வருவதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை நாம் அதிகரிக்க முடியும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>udal edai athikarikka tips