வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா? இத்தனை நாள் தெரியாமல் போச்சே!!

Updated On: May 25, 2023 1:05 PM
Follow Us:
Health Benefits of Eating Sitting On The Floor in Tamil
---Advertisement---
Advertisement

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Health Benefits of Eating Sitting On The Floor in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது. உணவை எடுத்துகொள்ளும் முறையும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தமிழகத்தில், தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் பிரியாக உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டோ சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம் ஆனால், கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை! தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்பதற்கான சில காரணங்கள் இதோ..

உடல் எடை குறையும்:

உடல் எடை

தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. டேபிளில் அமர்வதை விட, தரையில் அமரும்போது, வேகஸ் எனும் நரம்பு (மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்பு) சுறுசுறுப்பாக செயல்படுகிறது. இதனால் வயிறு நிறைந்தவுடன் உடனடியாக தகவலை மூளைக்கு அனுப்புகிறது. அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு உடல் எடை சீராகிறது.

செரிமானம் பிரச்சனைக்கு சிறந்தது:

செரிமானம் அதிகரிக்க

வழக்கமாக தரையில் அமரும்போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்வது ‘சுகாசனம்’ எனப்படும் யோகப் பயிற்சியாகும். இந்த நிலை செரிமானத்திற்கு உதவுகிறது. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உணவு எடுப்பதற்கு நாம் முன்னால் செல்லுவோம். உணவு எடுத்த பிறகு பின்னால் வருவோம். இந்த செயல்பாட்டால் வயிற்றில் உள்ள தசைகள் செயல்பட்டு எளிமையான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

நினைவாற்றல்

அமைதியான மனநிலையும், செய்யும் காரியத்தில் கவனத்தைச் செலுத்தவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உணவின் சுவை, நறுமணம் முதலிய அனைத்தையும் கவனிக்க உதவுகிறது. இதனால் மறைமுகமாக நினைவாற்றலையும் அதிகரிக்கிறது.

உடம்பு வலி குறையும்:

தரையில் அமர்வது இன்னொரு ஆசனமான பத்மாசனத்துடன் தொடர்புடையது. இதன் மூலம் வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் அனைத்தும் விரிவடைந்து உடம்பில் உள்ள வலிகளை குறைக்கிறது. தரையில் அமர்ந்து உணவு சாப்பிடும் பொழுது உடல் தசைகள் நன்றாக செயல்பட்டு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது.

தோள்பட்டை வலி குறையும்:

தோள்பட்டை வலி

ஆரோக்கியமான வாழ்விற்கு தோரணை மிகவும் முக்கியமானதாகும். தரையில் அமரும்போது நமது முதுகுத்தண்டு நேராக இருந்து கம்பீரமான தோரணையை ஏற்படுத்துகிறது. இதனால் தோள் பட்டையில் உள்ள வலிகள் குறைந்து, தசைகள் வலுவடைவதற்கு உந்து சக்தியாகவும், நரம்பு மண்டலத்தை சீரமைக்கவும் உதவுகிறது.

மன அமைதி கிடைக்கும்:

மன அமைதி பெற

பரபரப்பான வாழ்க்கை முறையில் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவது சாப்பிடும்போது மட்டும்தான். குடும்பத்துடன் ஒன்றாக தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, மன நிம்மதி ஏற்பட்டு உறவை மேம்படுத்த முடியும்.

எலும்புகள் வலுப்பெறும்:

எலும்புகள் வலுப்பெறும்

தொடர்ச்சியாக முட்டிகளை மடக்கி அமர்வதனால் மூட்டுகளுக்கும், இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கிறது. மேல்வாதம் மற்றும் கீழ்வாதம் முதலியவற்றை தடுக்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவதனால் இது மூட்டுகளை எளிதாக இயங்கச் செய்கிறது. தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியே.

ஆயுள் அதிகரிக்கும்:

தரையில் அமர்ந்து சாப்பிட்டு, எந்த ஒரு உதவியும் இல்லாமல் எழுந்து நிற்பவர்களுக்கு ஆயுள் அதிகமாவதை ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், நமது ஆயுள் அதிகரிப்பதற்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு எளிய பயிற்சியாகும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now